மேலும் அறிய

Cooku with Comali 5: செல்லம்மா அன்ஷிதா முதல் நாஞ்சில் விஜயன் வரை: குக்கு வித் கோமாளியில் இணைந்த 5 புது கோமாளிகள்!

Cooku wih Comali 5: குக்கு வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் புதிதாக என்ட்ரி கொடுத்து இருக்கும் புது புது கோமாளிகள் பற்றிய ஒரு பார்வை.

விஜய் டிவியின் அட்ராசிட்டி நிகழ்ச்சி என்றால் அது எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். கடந்த நான்கு சீசன்களாக உச்சபட்ச வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சியை ரசிகர்கள் கொண்டாடினர். 

இந்நிலையில் திடீரென குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரித்து வந்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் மற்றும் நடுவர் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் விலகுவதாக அறிவிப்பு வெளியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இத்துடன் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி அவ்வளவு தானா என வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் குக்கு வித் கோமாளி 5வது சீசன் குறித்த ப்ரோமோ வெளியாகி இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.

Cooku with Comali 5: செல்லம்மா அன்ஷிதா முதல் நாஞ்சில் விஜயன் வரை: குக்கு வித் கோமாளியில் இணைந்த 5 புது கோமாளிகள்!

செஃப் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மிகவும் பிரபலமான சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் இணைய புதுசு புதுசாக ஐந்து கோமாளிகளும் என்ட்ரி கொடுத்துள்ளனர். அந்த வகையில் நேற்று (ஏப்ரல் 27) தேதி முதல் கோலாகலமாக புதிய பொலிவுடன் இனிதே தொடங்கியது குக்கு வித் கோமாளி சீசன் 5. 

ஏற்கனவே முந்தைய சீசன்களில் கோமாளிகளாக கலக்கிய குரேஷி, புகழ், சுனிதா, சரத், வினோத் உள்ளிட்டோர் இந்த சீசனிலும் தொடர்கிறார்கள் என்றாலும் அவர்களுடன் சென்று மல்லுக்கட்ட புதிதாக ஐந்து கோமாளிகள் என்ட்ரி கொடுத்துள்ளனர். அவர்கள் யார் என்பது பற்றியும் அவரின் பற்றின குட்டி பயோவையும் பார்க்கலாம் வாங்க :

Cooku with Comali 5: செல்லம்மா அன்ஷிதா முதல் நாஞ்சில் விஜயன் வரை: குக்கு வித் கோமாளியில் இணைந்த 5 புது கோமாளிகள்!

அன்ஷிதா :

மலையாளியான அன்ஷிதா விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். மதிய நேரங்களில் ஒளிபரப்பாகும் 'செல்லம்மா' என்ற தொடரில் கதாநாயகியாக நடிக்கும் அன்ஷிதா வித்தியாசமான ஒரு கோணத்தில் கோமாளியாக என்ட்ரி கொடுக்கிறார். சீரியலில் சீரியஸ் ஹீரோயினாக பார்த்த ஒருவரின் கோமாளித்தனத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். 

கேமி: 

ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜே வாக இருக்கும் கேமி சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ். மிகவும் பிரபலமான பர்சனாலிட்டிகளை பேட்டி எடுத்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். இந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக என்ட்ரி கொடுக்க உள்ளார். 

Cooku with Comali 5: செல்லம்மா அன்ஷிதா முதல் நாஞ்சில் விஜயன் வரை: குக்கு வித் கோமாளியில் இணைந்த 5 புது கோமாளிகள்!

ஷப்னம் :

தெய்வத் திருமகள், ராஜா ராணி உள்ளிட்ட ஏராளமான சீரியல்கள் மூலம் நடிகையாக பரிச்சயமான ஷப்னம் தற்போது தன்னுடைய காமெடி சென்ஸை வெளிக்காட்ட இந்த குக்கு வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கோமாளியாக என்ட்ரி கொடுக்க உள்ளார் என கூறப்படுகிறது. 

நாஞ்சில் விஜயன் :

விஜய் டிவியில் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய தனித்துமான நகைச்சுவையால் ரசிகர்களின் கவனம் பெற்றவர் நாஞ்சில் விஜயன். இவர் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருந்தாலும் தற்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாக என்ட்ரி கொடுக்க உள்ளார். 

ராமர் :

என்னமா இப்படி பண்றிங்களே அம்மா... என்ற காமெடி மூலம் பிரபலமான  ராமர் பற்றி விஜய் டிவி ரசிகர்களுக்கு அறிமுகம் தேவையே இல்லை. அவரின் காமெடிக்கு என தனி ஸ்பெஷலிட்டி உள்ளது. எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றுள்ள ராமர் கோமாளியாக என்ட்ரி கொடுக்க உள்ளார். 

இவர்களுடன் புதிதாக இரண்டாவது வாரம் முதல் காமெடியனாக என்ட்ரி கொடுக்க உள்ளார் 'கனா காணும் காலங்கள்' ப்ராடக்ட்களில் ஒருவரான திடியன். சமீபத்தில் வெளியான நயன்தாராவின் 'அன்னபூரணி' படத்தின் மூலம் பிரபலமானார். தன்னுடைய ஹியூமர் சென்ஸை ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஆழமாக கொண்டு சேர்க்க வேண்டும் என நோக்கத்தில் 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியில் வரும் வாரங்களில் என்ட்ரி கொடுக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது. 

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி ஃபார்மேட்டுக்கு பழக்கபட்டு போன பழைய கோமாளிகளுக்கு எப்படி ஈடு கொடுத்து இவர்கள் புதுமையாக நிகழ்ச்சியில் தனித்து தெரிய போகிறார்கள் என்பதை வரும் எபிசோட்களில் தெரியவரும்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai Gun Shot: ஹாட்ரிக் அடித்த காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Madurai Gun Shot: ஹாட்ரிக் அடித்த காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
MS Dhoni:  நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி... மரண மாஸ் வீடியோ
MS Dhoni: நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி... மரண மாஸ் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai Gun Shot: ஹாட்ரிக் அடித்த காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Madurai Gun Shot: ஹாட்ரிக் அடித்த காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
MS Dhoni:  நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி... மரண மாஸ் வீடியோ
MS Dhoni: நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி... மரண மாஸ் வீடியோ
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
"இந்து என சொல்வது வெட்கக்கேடான விஷயமல்ல" ஆர்.எஸ்.எஸ் சொன்னது என்ன?
Embed widget