Bhagyalakshmi Serial: பாக்கியலட்சுமி சீரியலின் புதிய ராதிகா யார் தெரியுமா..? என்னாச்சு ரேஷ்மாவிற்கு..? ரசிகர்கள் அதிர்ச்சி..!
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா, தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Bhagyalakshmi Serial : பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா, தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
சின்னத்திரை நிகழ்ச்சிகள் வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது. என்னதான் டிஜிட்டல் யுகத்தை நோக்கி பார்வையாளர்கள் நகர்ந்தாலும் வார நாட்களில் சீரியலிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களும் இன்றளவும் பேவரைட்டான ஒன்றாகவே உள்ளது.
இதனை ஒரு கருவியாக கொண்டு சேனல்கள் புதுப்புது சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களை அறிமுகம் செய்கின்றது. விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல், அவரோடு சகித்து கொண்டு வாழ்ந்த நிலையில் அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தித்தங்கள் என்னென்ன என திரைக்கதை சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.
ரேஸ்மா
பாக்கியலட்சுமி சீரியல் முதலில் ராதிகாவாக மிகவும் அமைதியான ஒரு கதாபாத்திரமாக நடித்தவர் ஜெனிபர். அவரின் பிரசவத்திற்காக சீரியலில் இருந்து விலகிய பிறகு ஜெனிபரின் ரோலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் ரேஷ்மா பசுபுலெட்டி. இவரின் ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியதும் அந்த கேரக்டரே முற்றிலுமாக மாறிவிட்டது.
ரேஷ்மா ராதிகாவாகவே கனகச்சிதமாக பொருந்தி விட்டார். பாக்கியலட்சுமி சீரியல் இன்று பலருக்கும் பிடித்த ஒரு சீரியலாக இருப்பதற்கு முக்கியமான ஒரு காரணம் ரேஷ்மா என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ராதிகாவுக்கு பதில் யார்?
இந்நிலையில், அனைவரையும் கவர்ந்து வந்த ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரேஷ்மா தற்போது இதில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்து. அவருக்கு வேறு ஒரு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ரேஷ்மா எந்த வித அறிவிப்பையும் தற்போது வரை வெளியிடவில்லை. மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சீதாராமன் சீரியலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி அடுத்து யார் ராதிகா கதாபாத்திரத்திற்கு வருவார்கள் என்பது ரசிகர்களிடையே கேள்விக்குறியாகவே உள்ளது. அதன்படி ரேஷ்மா நடித்து வந்த ராதிகா கதாபாத்திரத்தில் இனி அவருக்கு பதில் நடிகை வனிதா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவல் தற்போது வரை உறுதிப்படுத்தபட வில்லை. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரையில் வெளியாகும் என்று தெரிகிறது.
ஏற்கனவே பிக்பாஸ், பிபி ஜோடிகள், குக் வித் கோமாளி என விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார். மேலும் ஜீ தமிழின் ஒரு சில சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.