மேலும் அறிய
Tamilnadu Roundup: சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவை , இளையராஜா உற்சாக பேட்டி - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Headlines March - 10: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன

தலைப்புச் செய்திகள்
Source : Special Arrangement - ABP Network
- செங்கல்பட்டில் இன்று ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் - 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
- ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து
- 13 நாடுகளில் எனது சிம்பொனியை அரங்கேற்ற செய்ய திட்டமிட்டுள்ளேன், ஏற்பாடுகள் தயார் - லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இளையராஜா உற்சாக பேட்டி
- தமிழ்நாடு, இந்தியாவுக்கு மட்டுமின்றி ‘இசைஞானி’ ஆசிய கண்டத்திற்கே பெருமை சேர்த்துள்ளார்..” சிம்பொனி அரங்கேற்றம் முடிந்து திரும்பிய இளையராஜாவை தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு புகழாரம்
- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகிறது - தூத்துக்குடியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
- கேப்டனுக்கு மனைவியாக இருந்ததைவிட, அவருக்கு நான் தாயாகவும் வாழ்ந்தேன்” -திண்டுக்கல்லில் கண்ணீர் மல்க பேசிய பிரேமலதா விஜயகாந்த்
- அதிகரிக்கும் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமானங்கள் இயக்கம்
- புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஐயப்பன் (48), திருவண்ணாமலையை அடுத்த நீலந்தாங்கல் பகுதியில் வெட்டிப்படுகொலை
- உளுந்தூர்பேட்டை அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விறகு ஏற்றிச் சென்ற டிராக்டரின் பின்பக்கம் ஆம்புலன்ஸ் மோதி விபத்து - 3 பேர் காயம்
- சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத 973 வாகனங்களை மார்ச் 26ம் தேதி ஏலம் விட போக்குவரத்து போலீசார் ஏற்பாடு.
- அருப்புக்கோட்டை அருகே மருத்துவ கேஸ் ஏற்றி வந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து மருத்துவ கேஸ் லாரியில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு
- ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகியை வெட்டி படுகொலை செய்த 8 பேர் கைது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் கடந்த 2021ஆம் ஆண்டு, விரலை வெட்டியதற்காக பழிக்குப் பழியாக உயிரை வாங்கியது விசாரணையில் அம்பலம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















