Baakiyalakshmi Serial August 8 : இனியாவுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி நடந்துக்குறா? மீண்டும் எழிலை கடுமையாக கண்டிக்கும் ஈஸ்வரி
Baakiyalakshmi serial today : வாய்ப்பு தேடி போன இடத்தில் அவமானப்பட்டு வீட்டுக்கு வந்த எழிலை மேலும் வார்த்தையால் நோகடிக்கிறார் ஈஸ்வரி. பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடக்கிறது.
Baakiyalakshmi serial August 8 : விஜய் டிவியின் மோசட் ட்ரெண்டிங் தொடரான 'பாக்கியலட்சுமி' தொடரின் இன்றைய (ஆகஸ்ட் 8) எபிசோடில் எழில் அவனுடைய ப்ரெண்ட் சதீஷுடன் புரொடியூசரை பார்ப்பதற்காக காத்திருக்கிறான். அவரை சந்திக்க உள்ளே சென்ற எழிலுக்கு அவமானம் தான் மிஞ்சியது. என்ன நடந்தது? ஏன் இரண்டு வருடங்களாக எதுவும் பண்ணவில்லை? என அந்த புரொடியூசர் கேட்க எழில் நடந்த உண்மையை அத்தனையும் மறைக்காமல் சொல்கிறான். அதை கேட்ட அந்த புரொடியூசர் உன்னை நம்பி எப்படி படம் பண்றது. அதனால் உனக்கு வாய்ப்பு எல்லாம் கொடுக்க முடியாது என அசிங்கப்படுத்தி அனுப்பிவிடுகிறார். எழில் ப்ரெண்ட் சமாதானம் செய்து அழைத்து வருகிறான்.
வீட்டில் என்ன செய்வது என தெரியாமல் இனியா பாக்கியா பின்னாடியே போகிறாள். கிச்சனில் ஏதாவது உதவி பண்ணட்டுமா என அனைவரிடத்திலும் கேட்கிறாள். அதை பார்த்து அவர்களுக்கு ஏன் இனியா இப்படி செய்கிறாள் என புரியவில்லை. பாக்கியாவிடம் சென்று எனக்கு சமைக்க சொல்லி தரியா? என கேட்கிறாள். செமெஸ்டர் லீவு வரட்டும் நான் சொல்லி தருகிறேன் என பாக்கியா சொல்கிறாள். பின்னர் ஜெனி இனியாவை மாடிக்கு அழைத்து செல்கிறாள்.
செழியன் ஆபீசில் இருந்து வீட்டுக்கு வந்து பாக்கியாவிடம் வீட்டு செலவுக்காக பணம் கொடுக்கிறான். பாக்கியா வேண்டாம் என எவ்வளவு சொல்லியும் செழியன் கேட்கவில்லை. ராமமூர்த்தி ஈஸ்வரி என அனைவருமே பாக்கியாவை பணத்தை வாங்கிக்க சொல்லி சொல்கிறார்கள். பாக்கியா கையில் செழியன் பணத்தை கொடுக்கும் போது எழில் வந்து விடுகிறான். அதை பார்த்து அவனால் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்க முடியவில்லையே என வருத்தப்படுகிறான்.
எழிலை பார்த்ததும் ஈஸ்வரி மறுபடியும் அவனை அவமானப்படுத்த ஆரம்பித்து விடுகிறார். "வீட்டு செலவுக்கு இரண்டு பெரும் பணம் கொடுக்கணும் என ஏற்கனவே சொல்லி இருக்கேன். ஒருத்தனாவது கொடுக்குறானே. அது வரைக்கும் சந்தோஷம். இவனும் போறான் வாரான் ஆனால் எந்த வேலையும் நடக்க மாட்டேங்குது. எப்போ தான் பொறுப்பு வர போகுது. இன்னும் எத்தனை நாளைக்கு தான் பாக்கியாவே ஓடிக்கிட்டு இருப்பா" என்கிறார்.
"எனக்கு வேலைக்கு போக பிடிக்கும் அதனால தான் போறேன். காசு இல்லாம இல்லையே. நானே வீட்டை பார்த்து கொள்வேன்" என பாக்கியா சொல்ல அதை கேட்டு எழில் மனசு சங்கடப்பட்டு மாடிக்கு போய் விடுகிறான். பின்னாடியே அமிர்தாவும் அழுது கொண்டே போய்விடுகிறாள்.
ராமமூர்த்தி ஈஸ்வரியை திட்டுகிறார். செழியன், பாக்கியா, இனியா என அனைவருமே ஈஸ்வரி அப்படி பேசி இருக்க கொண்டது என சொல்கிறார்கள். பாக்கிய வருத்தப்பட்டு நிற்கிறாள். இது தான் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் கதைக்களம்.