(Source: Poll of Polls)
Baakiyalakshmi serial August 7 : பாக்கியாவை பழிவாங்க கோபிக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்... எழிலை காயப்படுத்தி பேசும் ஈஸ்வரி...
Baakiyalakshmi Today : எழில் சினிமாவை நம்பி ஏமாந்து விடக்கூடாது என ஈஸ்வரி அட்வைஸ் செய்ய அது எழிலுக்கு சங்கடமாக இருக்கிறது. பாக்கியாவை பழிவாங்க கோபிக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.
Baakiyalakshmi serial August 7 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய (ஆகஸ்ட் 7) எபிசோடில் பாக்கியாவும் பழனிச்சாமியும் பேசி கொண்டு இருக்கிறார்கள். இனியா லெட்டர் எழுதி வைத்துவிட்டு தப்பான முடிவு எடுக்க நினைத்ததை பற்றி பழனிச்சாமியிடம் சொல்லி வருத்தப்படுகிறாள். "நல்ல வேளை நான் அப்போ எழுந்துட்டேன், இல்லனா என்ன நடந்து இருக்கும்" என பாக்கியா சொன்னதும் அதை கேட்டு ஷாக்கான பழனிச்சாமி "ஏன் இந்த இனியா பாப்பா இப்படி எல்லாம் நடந்துக்குது. நீங்க அவ கிட்ட பேசி புரிய வைச்சுடீங்க இல்ல. இனிமே அவ எந்த தப்பான முடிவும் எடுக்க மாட்டா" என சமாதானம் செய்கிறார்.
எழில் மிகவும் சோகமாக வீட்டுக்கு வருகிறான். அவனிடம் போன விஷயம் என்ன ஆச்சு என தாத்தா விசாரிக்கிறார். புரொடியூசரை பார்க்க முடியாத விஷயம் பற்றி சொல்லி வருத்தப்படுகிறான். "இவரு இல்லாட்டி வேற யாரவது கிடைப்பாங்க. நீ கவலைப்படாத" என சொல்லி தாத்தா சமாதானம் செய்கிறார். அப்போது அங்கே வந்த ஈஸ்வரி நடந்ததை பற்றி கேட்டு எழிலுக்கு அட்வைஸ் செய்கிறார். "நான் சொல்றேன் என தப்ப எடுத்துக்காத எழில். சினிமா தான் உன்னோட கனவுனு எனக்கு தெரியும். ஆனா அது நடக்கலைனா வேற என்ன பண்ணலாம் என யோசிக்கணும். அது தான் எதார்த்தம். நல்லா படிச்சு இருக்க. உன்னோட படிப்புக்கு ஏத்த வேலையை தேடிகிட்டு குழந்தை பெத்துக்கிட்டு வாழ்க்கையில செட்டில் ஆகுற வழியை பாரு" என ஈஸ்வரி சொல்ல எழில் கோபமாக அங்கிருந்து எழுந்து சென்று விடுகிறான். அவன் பின்னாலேயே அமிர்தாவும் போகிறாள்.
ராமமூர்த்தி ஈஸ்வரியை திட்டுகிறார். "அவனே நொந்து போய் வந்து உட்கார்ந்தான். அவனை இப்போ போய் இதை எல்லாம் பேசி காயப்படுத்தணுமா?" என திட்டுகிறார். "இதை நீங்க எல்லாரும் சொல்லி இருக்கணும். அதை சொல்லாம அவனை ஏத்திவிட்டு கிட்டே இருந்தா அவன் இப்படியே தான் இருப்பான்" என சொல்லிவிட்டு செல்கிறாள்.
ரூமுக்கு சென்ற எழில் பாட்டி பேசிடியதை நினைத்து கண்கலங்குகிறான். அப்போது அமிர்தா உள்ளே வரவும் எந்த கவலையும் இல்லாதது போல சமாளிக்கிறான் எழில். பாட்டி பேசியதை நினைத்து எனக்கு எந்த கவலையும் இல்லை. அதை நினைத்து நான் வருத்தப்படவும் இல்லை. நான் சோம்பேறி தனமாக எல்லாம் வேலைக்கு போகாம இல்லை. சின்ன வயசுல இருந்தே எனக்கு டைரக்டர் ஆகணும் என்பது தான் கனவு. நான் முயற்சி பண்ணிகிட்டே தான் இருக்கேன். ஆனால் என்னால் சாதிக்க முடியவில்லை" என எழில் சொல்ல "நான் மட்டும் உங்க கல்யாணத்தை வந்து நிறுத்தாமல் இருந்து இருந்தா நீங்க அந்த வர்ஷினியை கல்யாணம் பண்ணி இன்னிக்கு உங்கள் இலட்சியத்தை அடைந்து இருக்கலாம்" என்கிறாள்.
"என்னை நானே ஏமாத்துக்கிட்டு, அந்த பொண்ணு, உன்னை எல்லாரையும் ஏமாத்திட்டு சந்தோஷமா வாழ்ந்து இருக்க முடியுமா? அப்படி ஒரு வாழ்க்கைக்கு இது எவ்வளவோ பரவாயில்லை. நிச்சயம் ஒரு நாள் நான் ஜெயிப்பேன். அப்போ பாட்டி என்னை நினைத்து பெருமையாக சொல்லுவாங்க. அதுக்கு அப்புறம் நம்ம ஒரு குழந்தை இல்ல பத்து குழந்தை கூட பெத்துக்கலாம்" என்கிறான் எழில்.
கோபியும் செந்திலும் பாரில் உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தார்கள். பாக்கியாவை எப்படியாவது பழிவாங்கிய தீருவேன் என செந்திலிடம் சொல்லிக்கொண்டு இருகிறார் கோபி. அப்போது எதேச்சையாக செந்தில் தன்னுடைய பழைய நண்பர் ஒருவரை சந்திக்கிறார். கோபிக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் செந்தில். பேசி கொண்டே இருக்கும் போது செந்திலின் அந்த நண்பரும் ரெஸ்டாரண்ட் வைத்து இருந்ததை பற்றி சொல்கிறான். தன்னால் ரெஸ்டாரண்டை சரியாக பார்த்துக் கொள்ள முடியாததால் அதை வாடகைக்கு விட்டதை பற்றி சொல்கிறார்.
பேச்சு வாக்கில் அது தான் பாக்கியா நடத்தும் ரெஸ்டாரண்ட் என்பது கோபிக்கு தெரியவருகிறது. எப்படியாவது பாக்கியாவிடம் இருந்து அந்த ரெஸ்டாரெண்ட்டை பறிக்க வேண்டும் என செந்திலின் நண்பரை குழப்பி விடுகிறார். ஆனால் அவரோ என்னால் முடியாது என சொல்லிவிடுகிறார். கோபி அவருடைய போன் நம்பரை வாங்கி கொண்டு பின்னர் நிறைய விஷயங்கள் பேசலாம் என சொல்கிறார். செந்திலுக்கு கோபியின் பிளான் புரிந்துவிட்டது. கோபி சந்தோஷத்தில் கிளம்பி விடுகிறார். இது தான் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் கதைக்களம்.