மேலும் அறிய
Advertisement
Baakiyalakshmi serial Aug 2 : கோபி மானமே போச்சு! ரவுண்டு கட்டி அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்... இனியா படிப்பு அவ்வளவுதானா?
Baakiyalakshmi serial Today :இனியா காலேஜுக்கு வந்த கோபியை ஃலெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார் பிரின்சிபால். வீட்டுக்கு சென்ற கோபிக்கு அங்கும் அவமானம் காத்திருந்தது. இன்று பாக்கியலட்சுமியில்.
Baakiyalakshmi serial Aug 2 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' தொடரின் இன்றைய (ஆகஸ்ட் 2 ) எபிசோடில் இனியா காலேஜுக்கு சென்றும் பிரின்சிபாலிடம் டிசி கொடுக்க வேண்டாம் என கெஞ்சுகிறாள் பாக்கியா. ராமமூர்த்தி, ஈஸ்வரி, பாக்கியா மூவரும் எவ்வளவு சொல்லியும் பிரின்சிபால் இனியாவை காலேஜை விட்டு வெளியில் அனுப்பியே தீருவேன் என முடிவாக இருக்கிறார்.
பாக்கியா : மேடம் இனி நான் இனியா எந்த தப்பும் பண்ணாம நான் பாத்துக்குறேன். அவளால நிச்சயம் உங்க காலேஜுக்கு பெருமை தான் கிடைக்கும். இனி எந்த கெட்ட பெரும் வரமா நான் பாத்துக்குறேன். இந்த ஒரு தடவை மட்டும் மன்னிச்சுடுங்க மேடம். ப்ளீஸ்.
நான் ஸ்கூல் வரைக்கும் தான் படிச்சு இருக்கேன். எனக்கு நிறைய படிக்கணும் என ஆசை இருந்துது ஆனா என்னால படிக்க முடியல. அதனால படிப்போடு அருமை எனக்கு தெரியும். நான் கண்டிப்பா இனியா எந்த தப்பும் பண்ணாம பாத்துக்குறேன்" என பிரின்சிபாலிடம் கெஞ்சுகிறாள் பாக்கியா.
ஈஸ்வரி : பாக்கியா நல்ல படியா தான் பசங்களை பாத்துக்குறா. வீட்டையும் கவனிச்சுக்கிட்டு பிசினஸையும் தனி ஆள சமாளிக்குறா:.
இனியாவோட அப்பா எங்க இருக்காரு? என பிரின்சிபால் கேட்டதும் ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் கோபி குடும்பத்தை கவனிக்காமல், பிள்ளைகள் மேல் அக்கறை இல்லாமல், பெத்தவங்களை கடின மனைவியை எல்லாம் விட்டுவிட்டு இரண்டாவது கல்யாணம் செய்து கொண்ட கதை மொத்தத்தையும் பிரின்சிபாலிடம் சொல்லிவிடுகிறார்.
பாக்கியாவின் போராட்டத்தை பற்றி கேட்டு மனம் இறங்கிய பிரின்சிபால் இனியாவுக்கு லாஸ்ட் சான்ஸ் அதுவும் அவளுடைய குடும்பத்துக்காக கொடுத்துகிறார். இனியாவை கிளாஸ்சுக்கு அனுப்பிவிட்டு எல்லாரும் வீட்டுக்கு கிளம்பி விடுகிறார்கள்.''
கோபி இனியாவின் காலேஜுக்கு வந்து பிரின்சிபாலை சந்திக்கிறார். ஆனால் பிரின்சிபால் கோபியை நார் நாராக கிழித்து விடுகிறார். இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டால் குழந்தைகளை பொறுப்புடன் கவனிக்க கூட மறந்து விட்டீர்களா? என கோபியை திட்ட அவமானம் தாங்காமல் கோபி வெளியில் வந்து விடுகிறார்.
இனியாவுக்கு கோபி தகவல் சொல்லி அனுப்ப இனியா வருகிறாள். வீட்டில் இருந்து பாக்கியா, பாட்டி, தாத்தா வந்து பிரின்சிபாலிடம் பேசியதை ஏன் சொல்லவில்லை என கேட்கிறார். டென்ஷனாக இருந்ததால் மறந்துவிட்டேன் என இனியா சாரி கேட்கிறாள். அங்கிருந்து கிளம்பிய கோபி நேராக பாக்கியா வீட்டுக்கு போகிறார்.
ஈஸ்வரி, ராமமூர்த்தியிடம் எதற்காக வீடு கதையை எல்லாம் பிரின்சிபாலிடம் செல்ல வேண்டும் என சத்தம் போடுகிறார். "நாங்களாக ஒன்னும் சொல்லவில்லை. பிரின்சிபால் தான் இனியா அப்பா எங்க என கேட்டாங்க. அதனால தான் நீ குடும்பத்தை அம்போ என விட்டுவிட்டு இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்ட கதையை சொன்னோம் " என்கிறார் ராமமூர்த்தி.
"உங்களுக்கு வேணாம் நான் பிள்ளையாக இருக்கலாம் ஆனால் என்னுடைய மகளுக்கு நான் அப்பா எனும் உரிமையை யாரும் பறிக்க முடியாது. இது வரைக்கும் நான் என்னோட பசங்களுக்கக எல்லாம் செய்யலையா" என்கிறார் கோபி. "அதனால் எல்லாம் ஒரு அப்பாவாகி விடமுடியாது. தயவு செய்து இந்த வீட்டுக்கு வராதீங்க போங்க" என பாக்கியா சொல்ல அவமானப்பட்ட கோபி ராதிகா வீட்டுக்கு வருகிறார்.
கோபி டல்லாக இருப்பதை பார்த்து என்ன நடந்தது என ராதிகா கேட்க நடந்தது பற்றி கோபி அவளிடம் சொல்கிறார். ராதிகாவும் கோபியை பயங்கரமாக அவமானப்படுத்தி பேசுகிறாள். இது தான் இன்றைய எபிசோட் கதைக்களம்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஜோதிடம்
ஆன்மிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion