மேலும் அறிய

Baakiyalakshmi: அசிங்கப்படுறதே கோபிக்கு வேலையா போச்சு.. ராதிகா போட்ட கண்டிஷன்.. பாக்கியலட்சுமியில் இன்று!

Baakiyalakshmi Sep 23: ராதிகா வீட்டுக்கு ஆவேசமாகச் சென்று கோபியை மிரட்டி வீட்டு சாவியை வாங்கிய பாக்யா. மறுபடியும் நடுரோட்டில் அவமானப்பட்ட கோபி. கணேஷுக்கு அமிர்தா வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் ராதிகா வீட்டுக்கு ஆவேசமாகச் சென்ற பாக்கியா கதவைத் தட்ட, யார் அது கதவை இப்படி தட்டுவது என வந்து திறந்து பார்க்க, அங்கே பாக்கியா கோபமாக நிற்க அதிர்ச்சி அடைகிறாள் ராதிகா. கோபியும் வெளியில் வந்து பார்க்க ஷாக்காகிறார். "என்ன இடியட் வீடு மாறி வந்துட்டியா" என நக்கலாகக் கேட்க வீட்டுக்குள் நுழைந்த பாக்கியா "என்னோட வீட்டு சாவியை குடுங்க" என்கிறாள். 

சாவியை கொடுக்க முடியாது என கோபி வாக்குவாதம் செய்ய, பாக்கியா அவருக்கு சரியான பதிலடி கொடுக்கிறாள். குறுக்கே பேசிய ராதிகாவை அடக்குகிறாள் பாக்கியா. "பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டு சாவியை கொடுக்க முடியாது” என்கிறார். “இவர் கிட்ட எதுக்கு என்னோட வீட்டு சாவி இருக்கணும்? சாவியை வாங்கி கொடுங்க" என ராதிகாவிடம் கேட்கிறாள் பாக்கியா. 

மீண்டும் மீண்டும் சாவியை கொடுக்க முடியாது என கோபி சொல்ல, "இப்போ உங்களாக கொடுக்க முடியலைன்னா நான் போலீஸ் ஸ்டேஷன் போவேன்" என சொல்லி மிரட்டுகிறாள் பாக்கியா. அப்பவும் அடங்காத கோபி, உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ என சொல்கிறார். "எதுக்கு தேவையில்லை பிரச்சினை சாவி எங்க?" எனக் கேட்டு சாவியை பாக்கியாவிடம் வாங்கி கொடுக்கிறாள். சாவியை வாங்கி கொண்டு வந்து விடுகிறாள் பாக்கியா. 

அடுத்த நாள் காலை கோபி வாங்கிங் செல்லும் போது பாக்கியாவும் வாக்கிங் வருகிறாள். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டாலும் பாக்கியா கோபியை கண்டுக்காமல் செல்ல பின்தொடர்ந்து சென்று மீண்டும் வம்பிழுக்கிறார் கோபி. அவர்களை பார்த்த இருவர் "என்ன ஜோடியா வாக்கிங் வந்து இருக்கீங்களா?" என கேட்கிறார்கள். "உங்களுக்கு விஷயமே தெரியாதா? நான் இவளை டைவர்ஸ் பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணிட்டேன்" என அவர்களிடம் சொல்கிறார் கோபி. 

அவருக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் பாக்கியா அவர்களிடம் "நீங்க இப்ப தான் ஊர்ல இருந்து வந்தீங்களா? மசாலா பொடி வேணும்னா வீட்டுக்கு வந்து வாங்கிக்கோங்க" என்கிறாள். வீடு எங்க இருக்கு? என அவர்கள் கேட்க "அதே வீடு தான் பாக்கியலட்சுமி இல்லம் போர்டு போட்டு இருக்கும். டைவர்ஸ் பண்ணதால ஜீவனாம்சமாக கொடுத்த வீடுன்னு நினைக்காதீங்க. நான் பணம் கொடுத்து அந்த வீட்டை வாங்கி இருக்கேன்" என சொல்ல அவமானப்படுகிறார் கோபி. 

"நீ ரொம்ப கஷ்டப்பட போற பாத்துக்கோ. நான் மறுபடியும் பழைய இடத்துக்கு வருவேன். அப்போ நீ யோசிப்ப. ஐயோ நம்ம இப்படி எல்லாம் பேசி இருக்க கூடாதுன்னு கவலைப்படுவ" என பாக்கியாவை பார்த்து சொல்கிறார் கோபி. "துரோகம் பண்ணவங்க, வீடு புகுந்து லைசென்ஸ் திருடுனவங்க எல்லாம் சந்தோஷமா இருக்கும் போது நான் ஏன் கஷ்டப்பட  போறேன். நான் நல்லா இருப்பேன்" என சரியான நோஸ்கட் கொடுக்கிறாள் பாக்கியா. 

அமிர்தாவின் ஞாபகமாகவே இருக்கும் கணேஷ், அமிர்தாவின் அம்மா வீட்டுக்குப் போய் கதவை தட்டுகிறார். கதவைத் திறந்து பார்த்து அமிர்தாவின் அம்மா கணேஷை பார்த்து ஷாக்காகிறார். அமிர்தா பற்றி கணேஷ் விசாரித்து அவளுடைய போன் நம்பரை கேட்கிறான். “கொஞ்சம் வெளியில வாங்க போன் நம்பர் தரேன்” என சொல்லி கணேஷை வெளியில் அழைத்து வந்து கதவை மூடி கொள்கிறார் அமிர்தாவின் அம்மா. "ஏன் அமிர்தா நம்பரை யாருமே கொடுக்க மாட்டேங்குறீங்க" என அழுது கொண்டே அங்கிருந்து திரும்புகிறான். 

கேன்டீனுக்கு வந்த ராதிகா பாக்கியாவிடம் "இனிமே கேன்டீனை விட்டுட்டு நீங்க எங்கேயும் வெளியே போகக் கூடாது" என்கிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) எபிசோட் முடிவுக்கு வந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Govt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்Aadhav Arjuna: ”ஒன்றிய அரசையே சொல்லாதீங்க!” திமுக-வை விளாசும் ஆதவ்! விசிகவில் வெடிக்கும் கலகம்Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை; தொடரும் வெள்ள மீட்பு பணி.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை; தொடரும் வெள்ள மீட்பு பணி.!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Embed widget