Baakiyalakshmi Sep 1: நடுரோட்டில் இறக்கிவிட்டு ஓடிய டிரைவர்... பாக்கியா முடிவால் பயந்துபோன ஈஸ்வரி... பாக்கியலட்சுமி இன்று
டிரைவர் அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆனதால் பாதியிலேயே இறக்கி விட்டு சார் டிரைவர் ஓடிவிட பாக்கியா காரை டிரைவ் செய்கிறாள். அதனால் பதட்டத்தில் ஈஸ்வரி அலறுகிறார். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் டிரைவரிடம் துருவி துருவி கேள்வி கேட்கிறார் கோபி. "காரில் எல்லாத்தையும் செக் பண்ணியாச்சா, கவனமா ஓட்டணும், ஓவர் டேக் செய்யக்கூடாது, பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வரணும்" என ஏகப்பட்ட கண்டிஷன் போடுகிறார். பின்னர் அனைவரும் கிளப்புகிறார்கள்.
வழக்கம் போல செல்வி ஜாலியாக பேசிக்கொண்டு வருகிறாள். "தாம்பரம் கூட தாண்ட மாட்டோம் என சார் சொன்னாரு, இப்ப பாத்தியா நாம தாம்பரம் தாண்டிட்டோம்" என பாக்கியாவிடம் செல்வி சொல்லி கிண்டல் செய்து வருகிறாள்.
நல்ல படியா போய்க்கொண்டு இருக்கும் நேரத்தில் திடீரென டிரைவருக்கு மாறி மாறி போன் வருகிறது. "வீட்டில் இருந்து தான் கால் பண்றங்க. என்னனு கேட்டுட்டு வந்துறேன்" என சொல்லிவிட்டு பேசுகிறார். 'அய்யய்யோ' என பதறியபடியே டிரைவர் பேசுகிறார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அனைவரும் காரை விட்டு இறங்கி சென்று டிரைவரிடம் விசாரிக்கிறார்கள்.
டிரைவருடைய அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு என சொல்லி கதறுகிறார். “ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் இருக்காங்களாம். கூட அம்மாவும் தங்கச்சியும் தான் இருக்காங்க. தங்கச்சி ரொம்ப சின்ன பொண்ணு அதனால் நான் கிளம்பட்டுமா? நான் எழிலுக்கு போன் பண்ணி வேற டிரைவர் அனுப்ப சொல்றேன்” என சொல்லிவிட்டு கிளம்புகிறார் டிரைவர்.
ராதிகா வீட்டுக்கு விருந்தாளிகள் வர துவங்கிவிட்டார்கள். கோபி மயூவுக்காக அழகான ஒரு நெக்லஸ் பரிசளிக்கிறார். அதை பார்த்து அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள்.
எழிலுக்கு போன் நாட் ரீச்சபிள் என வருகிறது செழியன் போனை கட் செய்கிறான். "ஒரு வாரம் கழிச்சு கூட்டிட்டு போறேன்னு கோபி சொன்னான். நீ தான் கேட்கவில்லை. நாம நினைக்குறது எல்லாமே நடந்துடாது இனியா. நீ தான் பாக்கியா அவளுக்கு புத்திமதி சொல்லணும். ஆனா இங்கே அவளோட சேர்ந்துக்கிட்டு நீயும் ஆடுற" என ஈஸ்வரி திட்டிக்கொண்டே இருக்கிறார். யோசித்து கொண்டு இருந்த பாக்கியாவுக்கு கோபி அசிங்கப்படுத்தியது ஞாபகம் வருகிறது.
உடனே பாக்கியா காரில் ஏறி சீட் பெல்ட் எல்லாம் மாற்றி சாமியை கும்பிட்டுவிட்டு காரை ஸ்டார்ட் செய்கிறாள். ஈஸ்வரி தான் பதட்டத்தில் புலம்பிக்கொண்டே இருக்கிறார். கண்களை மூடிக்கொண்டு ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என பிராத்தனை செய்து கொண்டே வருகிறார். ஆனால் பாக்கியா மிகவும் தன்னம்பிக்கையாக காரை ஒட்டுகிறாள். அதை பார்த்த இனியாவுக்கு சந்தோஷமாக இருக்கிறது.
மயூவிற்கு புடவை கட்டி அழைத்து வருகிறார்கள். கோபி மயூவை ஆச்சரியமாக பார்க்கிறார். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.