மேலும் அறிய

Baakiyalakshmi August 9: நடு ஹாலில் உட்கார்ந்து ஷாக் கொடுத்த ஈஸ்வரி... பாக்கியாவை மிரட்டும் இனியா... இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்! 

* பாக்கியா காலேஜ் போகும் விஷயம் பாட்டிக்குத் தெரிந்ததால் என்ன நடக்கும் என அனைவரும் பதற்றம்!  * பாட்டிகிட்ட மாட்டிவிடவா என பாக்கியாவை மிரட்டும் இனியா  * இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் காசிக்குச் சென்று திரும்பியுள்ள ஈஸ்வரி சாமியார் வேடத்தில் ருத்ராட்ச மாலையுடன் வந்து இறங்கியதைப் பார்த்தும் அவரின் பேச்சும் நடவடிக்கையும் பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். 

பாக்கியாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி :

வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது அமிர்தா "அம்மா காலேஜூக்கு போனதில் எல்லாருக்கும் சம்மதம் என்றாலும் இந்த விஷயம் பாட்டிக்குத் தெரிந்தால் என்ன நடக்கும் எனத் தெரியவில்லையே" என சொல்ல, ஜெனிக்கும் எழிலுக்கும் கூட கொஞ்சம் பதட்டமாகவே இருக்கிறது.

உடனே எழில் "நான் அம்மாவுக்கு போன் பண்ணி இதைச் சொல்றேன்" என போன் ட்ரை செய்கிறான். ஆனால் லைன் கிடைக்கவில்லை. "கிளாஸ் நடக்கும்போது போன் எடுக்கக் கூடாது" என்கிறாள் இனியா. "நான் போய் பாட்டி இப்படி வந்து இருக்கும் விஷயத்தை அம்மாகிட்ட சொல்லி அப்படியே கூட்டிட்டு வரேன்" என காலேஜுக்கு செல்கிறான்.

Baakiyalakshmi August 9: நடு ஹாலில் உட்கார்ந்து ஷாக் கொடுத்த ஈஸ்வரி... பாக்கியாவை மிரட்டும் இனியா... இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்! 

எழில் கொடுத்த ஷாக்:

பாக்கியாவை காலேஜில் பார்த்த எழில், பாட்டி ஊரில் இருந்து வீட்டுக்கு வந்த விஷயத்தைப் பற்றி சொல்லி அப்படியே அவங்க சாமியார் போல வந்து இறங்கி இருக்கும் விஷயத்தையும் சொல்கிறான். பயத்தில் குழம்பிப்போன பாக்கியா "பாட்டிக்கு நான் காலேஜ் போற விஷயம் தெரியுமா?"  எனக் கேட்கிறாள். "இதுவரைக்கும் தெரியாது. மற்ற விஷயங்களை நாம வீட்டுக்கு போய் பேசிக்கலாம்" என சொல்லி எழில் பாக்கியவை வீட்டுக்கு அழைத்து செல்கிறான். 

Baakiyalakshmi August 9: நடு ஹாலில் உட்கார்ந்து ஷாக் கொடுத்த ஈஸ்வரி... பாக்கியாவை மிரட்டும் இனியா... இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்! 

சமாளிக்கும் ராமமூர்த்தி :

ராமமூர்த்தியிடம் ஈஸ்வரி சாதாரண மனிதர்களுக்கு இருப்பது போல கோபம், ஆசை இது போன்ற எந்த உணர்வும் இப்போ என் கிட்ட இல்லை என சொல்லிக் கொண்டு இருக்கிறார்.  வீட்டுக்கு வந்த பாக்கியா "அத்தை எப்படி இருக்கீங்க? எப்போ வந்தீங்க?" என பயந்து கொண்டே கேட்க, ஈஸ்வரி கோபமாக "நான் வந்தெல்லாம் இருக்கட்டும்... நீ எங்க போன?" என மிரட்டலாக கேட்கிறார்.

அதை சமாளிக்க ராமமூர்த்தி "ஈஸ்வரி நீ தான் கோப பட மாட்டேன் என சொன்னியே" என்றதும் ஈஸ்வரி ஆமா ஆமா என சொல்லி ஜபம் செய்கிறார் அதைப் பார்த்த பாக்கியா ஒன்னும் புரியாமல் முழிக்கிறாள். பாக்கியா காலேஜ் பற்றின விஷயத்தை சொல்லாமல் அப்படியே மறைத்துவிட்டு ஈஸ்வரியிடம் ஆசீர்வாதம் வாங்கி விட்டு சென்று விடுகிறாள். 

Baakiyalakshmi August 9: நடு ஹாலில் உட்கார்ந்து ஷாக் கொடுத்த ஈஸ்வரி... பாக்கியாவை மிரட்டும் இனியா... இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்! 

யோகா செய்யும் ஈஸ்வரி :

அடுத்த நாள் காலை செழியன் ஜாக்கிங் சென்று வீடு திரும்பும்போது நாடு ஹாலில் உட்கார்ந்து ஈஸ்வரி யோகா செய்து கொண்டு இருப்பதைப் பார்த்து ஷாக்காகிறான். பாக்கியாவையும் ராமமூர்த்தியையும் அழைத்து வந்து இதைக் காண்பிக்க, அவர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள். அப்போது வரும் செல்வியும் அம்மாவுக்கு என்னவோ ஆகிவிட்டது என குழம்ப அவளை உள்ளே அழைத்து சென்ற பாக்கியா நடந்த விஷயத்தை பற்றி சொல்கிறாள்.

மிரட்டும் இனியா :

பாக்கியாவிடம் இனியா "அம்மா நீ இனிமேல் காலேஜ் வரவேண்டாம். எல்லாரும் என்னை கிண்டல் செய்றாங்க" என சொல்ல, பாக்கியா "அதெல்லாம் என்னால் முடியாது. நான் காலேஜுக்கு போவேன்" என்கிறாள். கடுப்பான இனியா "இரு பாட்டிகிட்ட நீ காலேஜ் போற விஷயத்தைப் பத்தி சொன்னா நீ வர மாட்ட இல்ல " என சொல்லி மிரட்ட பயத்தில் பாக்கியலட்சுமி என்ன செய்வது எனத் தெரியாமல் நிற்கிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி ((Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget