Anna Serial: சௌந்தரபாண்டி போடும் பிளான்.. கனிக்காக மனம் இறங்கிய சண்முகம் - அண்ணா சீரியல் இன்று!
வீட்டுக்குள் வந்த பாக்கியம் கனிக்கு ஆக வேண்டிய வேலைகளை பார்க்கிறாள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியம் கனியை பார்க்க கிளம்ப சௌந்தரபாண்டி கனியின் உண்மையான அப்பா அம்மாவை கூட்டிக் கொண்டு கிளம்பிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது பாக்கியம் சண்முகம் வீட்டுக்கு கிளம்ப, இசக்கி “நானும் வரேன்” என்று சொல்ல, “முதலில் நான் சண்முகத்தை சமாதானப்படுத்திட்டு அதுக்கப்புறம் உன்னை கூட்டிட்டு போறேன்” என சொல்கிறாள். மேலும் இந்த விஷயம் பாண்டியம்மாவுக்கு தெரியக்கூடாது எனவும் பேசிக் கொள்கின்றனர். பிறகு இருவரும் வெளியே கிளம்பி வர, பாண்டியம்மா “எங்கடி போறீங்க?” என்று கேட்க “அவங்க வீட்ல ஆள் இல்ல உங்ககிட்ட வாங்கி கட்டிக்காத” என்று பாண்டியம்மாவுக்கு வார்னிங் கொடுத்து கிளம்புகிறான் பாக்கியம்.
மறுபக்கம் கன்னியாகுமரி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து கனியின் அப்பா “என் பொண்ணு எவ்வளவு நாளா அங்க இருக்குது” என்று கேட்க, சௌந்தரபாண்டி “13 வருஷமா அங்கதான் இருக்கா” என்று சொல்கிறார். “13 வருஷமா சொல்லாம இப்ப சொல்றதுக்கான காரணம் என்ன?” என்று கேட்க, கனி “இருக்கறது என் மச்சான் வீடு தான்.. எனக்கும் அந்தக் குடும்பத்துக்கும் பகை இருக்கு” என்று சொல்லி அவர்களுடன் திருச்செந்தூர் கிளம்பி வருகிறார்.
இங்கே பாக்கியம் சண்முகம் வீட்டுக்கு வந்து வெளியே நின்று “சண்முகம் கூப்பிடாம வீட்டுக்குள்ள வரமாட்டேன்” என்று சொல்ல, சண்முகம் அவளைக் கூப்பிட மறுக்க, பிறகு எல்லோரும் கூப்பிட சொல்ல, வேண்டா வெறுப்பாக கூப்பிடுகிறான். இதனால் பாக்கியம் நான் வரமாட்டேன் என்று சொல்ல கனி அண்ணன் அத்தையைக் கூப்பிடு என்று சொன்னதும் கனிக்காக கூப்பிடுகிறான்.
இதையடுத்து வீட்டுக்குள் வந்த பாக்கியம் கனிக்கு ஆக வேண்டிய வேலைகளை பார்க்கிறாள். சௌந்தரபாண்டியன் கனியின் பெற்றோருடன் திருச்செந்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து இறங்குகிறார். “முதலில் இங்க போய் அது உங்க பொண்ணு தானே என்பதை உறுதி பண்ணிக்கங்க, அதுக்கப்புறம் செய்ய வேண்டியது நான் சொல்றேன்” என்று மீனாட்சியை அனுப்பி வைக்கிறார்.
இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Goat Update: "அநியாயம் பண்ணாதீங்க அப்டேட் வரும்" அன்புத் தொல்லை செய்யும் ரசிகர்களுக்கு வெங்கட்பிரபு வேண்டுகோள்!