Anna Serial: பரணி கொடுத்த வார்னிங், நடுநடுங்கிய சௌந்தரபாண்டி, நடந்தது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!
ஷண்முகம் தங்கைகளுக்காக சாப்பிட, மறுபக்கம் முத்துப்பாண்டி இசக்கியை ஏற்றுக் கொள்ள முடிவு செய்கிறான்.
![Anna Serial: பரணி கொடுத்த வார்னிங், நடுநடுங்கிய சௌந்தரபாண்டி, நடந்தது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்! anna serial today february 7th episode written update zee tamil serial Anna Serial: பரணி கொடுத்த வார்னிங், நடுநடுங்கிய சௌந்தரபாண்டி, நடந்தது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/07/a417bbc75f92391e752af44d56a95cde1707315163074574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சிவபாலன் கனிக்கு இப்படி ஆனதற்கு சௌந்தரபாண்டியன் திட்டம் தான் காரணம் என்ற உண்மையை பரணியிடம் கூறிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, பரணி இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சிவபாலனை அனுப்பி விட்டு நேராக வீட்டுக்கு வந்து பாண்டியம்மா முடியைப் பிடித்து இழுத்து, “நீ வந்ததுக்கு அப்புறம் தான் இவ்வளவு பிரச்சினை” என்று ஆவேசப்படுகிறாள். சௌந்தரபாண்டி பரணியைத் தடுத்து நிறுத்த, இவள் “கனியை கொல்ல முயற்சி செய்தது நீங்க தான் என்ற விஷயம் ஷண்முகத்திற்கு தெரிந்தால் உங்க ஒருத்தனையும் உயிரோட விட மாட்டான்” என்று எச்சரித்து செல்கிறாள்.
இதனைத் தொடர்ந்து சௌந்தரபாண்டி, பாண்டியம்மா ஆகியோர் “பரணி சொல்றதும் சரி தான்” என்று சொல்கிறார்கள். முத்துப்பாண்டியிடம் “இப்போதைக்கு இசக்கியை நீ ஏத்துக்கறதா சொல்லு” என்று சொல்கின்றனர். இங்கே ஷண்முகம் சாப்பிடாமல் இருக்க, பரணி அவனை திட்டி சாப்பிட சொல்ல, அவன் வேண்டாம் என்று மறுக்கிறான்.
இதனால் பரணி, “சரி நீ முத்துபாண்டியை கொன்னுட்டா உனக்கு என்ன அவார்டா தர போறாங்க, ஜெயில்ல தான் போடுவாங்க. அப்புறம் உன் 4 தங்கச்சிங்க நிலைமை என்ன?” என்று கேட்கிறாள். அப்போதும் ஷண்முகம் சாப்பிடாமல் இருக்க, பரணி கனியைக் கை காட்டி “ஆஸ்ப்பித்திரி வரைக்கும் போய்ட்டு வந்தவ, நீ சாப்பிடாமல் சாப்பிட மாட்டேனு பச்ச தண்ணி கூட குடிக்காமல் இருக்கா” என்று சொன்னதும் ஷண்முகம் தங்கைகளுக்காக சாப்பிட, மறுபக்கம் முத்துப்பாண்டி இசக்கியை ஏற்றுக் கொள்ள முடிவு செய்கிறான்.
இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: GOAT Movie Leaked: இணையத்தில் லீக் ஆன “கோட்” படக்காட்சி: விஜய் - பிரசாந்த் இடையே மோதல்: அதிர்ச்சியில் படக்குழு!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)