”என்னை விவேக் சார் ஒதிக்கிட்டாரு ! கத்தி அழுதேன் “ - நடிகர் டெலிபோன் ராஜ் ஓபன் அப்!
ஐந்து நாள் வரைக்கும் டயலாக்கே கொடுக்காம , நம்ம டயலாக் முழுதும் அங்கங்கே கொடுத்துட்டாரானே இருந்துச்சு.நான் விவேக் சாருக்கு சமமா என்னை நினைச்சுட்டு இருக்கேன்.
17 வயதில் கன்னியாகுமரியில் இருந்து சினிமா கனவுகளை சுமந்து வந்தவர் டெலிபோன் ராஜ். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்னதாக டெலிபோன் துறையில் வேலை செய்ததால் இவருக்கு அதுவே அடைமொழி ஆகிப்போனது. 2000 க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்திருப்பதாக கூறும் ராஜ் , வடிவேல் , விவேக் என நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்நிலையில் விவேக்குடன் ஒரு படத்தில் நடித்த பொழுது அவர் தன்னை அவமானப்படுத்தியதாக நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
" ஏ. வெங்கடேஷ் சார் படம் , வாடானு பெயர். அந்த படத்துல சுந்தர்.சி சார் ஹீரோவா நடிச்சுருந்தாரு. அதுல விவேக் சார் சுருளி ராஜன் மாதிரி நடிச்சிருந்தார். அவரோட ஒரு நாலு அல்லக்கை இருப்பாங்க. அதுல நான் ஒரு அல்லக்கை , போண்டா மணி, லொல்ளு சபா மனோகர் , நடேசன்னு ஒரு நடிகர். நாலு பேர் நடிச்சிருந்தோம். நடேசனும் போண்டா மணியும் விவேக் சார் கூட நிறைய நடிச்சவங்க. பழக்கப்பட்டவங்க. நான் வடிவேல் சார் கூட நடிச்சவன் , விவேக் சாருடனும் நிறைய நடிச்சிருக்கேன். விவேக் சாருக்கு அப்போ ஐந்து நாள் கால் ஷீட் , அவருக்கு இயக்குநர் டயலாக்கை கொடுத்ததும் , அவர் எல்லோருக்கும் டயலாக் கொடுத்துட்டாரு. எனக்கு கொடுக்கவே இல்லை. ஐந்தாவது நாள் முடிய போகுது, எனக்கு ஒரே ஒரு டயலாக் “ என்ன? “ என்பது மட்டும்தான். இயக்குநர் எல்லோரையும் டயலாக் சொல்ல சொல்லுறாரு, சொல்லுறாங்க. என்கிட்ட இப்போ நீங்க சொல்லுங்க சார் அப்படினு சொன்னதும் , நான் இதையும் அவங்களையே சொல்ல சொல்லுங்க சார் அப்படினு சொல்லிட்டேன். எனக்கு அவ்வளவு வருத்தம். ஐந்து நாள் வரைக்கும் டயலாக்கே கொடுக்காம , நம்ம டயலாக் முழுதும் அவங்களுக்கே கொடுத்துட்டாரானே இருந்துச்சு. நான் விவேக் சாருக்கு சமமா என்னை நினைச்சுட்டு இருக்கேன். ஐந்து நாளா எனக்கு என்ன என்பது மட்டும்தான் டயலாக்கானு, சொல்லிட்டு நான் சத்தமா அழுதுட்டு, நான் கிளம்புறேன் சார்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன். அதன்பிறகு இயக்குநர் என்ன பண்ணுறதுனு தெரியாம அமைதியா உட்காந்துட்டாரு. அதன் பிறகு சுந்தர்.சி சார், விவேக் சாரிடம் என்ன பிரச்சினைனு கேட்டாரு. அதுக்கு விவேக் சார் “அவருக்கு டயலாக் கம்மியாருக்காம்“ அப்படினு சொல்லிட்டு போயிட்டாரு. அதன் பிறகு சுந்தர் சி சார் என்னை கூப்பிட்டு கேட்டாரு. நான் சொன்னேன், நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த சான்ஸுக்கு ஏறி இறங்கியிருப்பேன், சுந்தர் சி சாரோட , விவேக் சாரோட நடிக்க போறேன்னு எவ்வளவு ஆசையா வந்திருப்பேன். என்னோட வரலாறு தெரியுமா சார் அவருக்குன்னேன். உடனே சுந்தர்.சி சார் சொன்னாரு , அவர் கவுண்டமணி சார்க்கிட்ட எல்லாம் எவ்வளவு இன்னல்களை சந்திச்சு வந்திருக்காரு தெரியுமா? அதை நீங்க அவர்க்கிட்ட காட்ட வேண்டியதுதானே சார், ஏன் எங்கக்கிட்ட காட்டுறீங்கன்னு கேட்டாரு. அதன் பிறகு நான் கிளம்பிட்டேன். அதன் பிறகு இயக்குநர் கூப்பிட்டு டயலாக் பார்த்துக்கொள்ளுங்கள் என சொன்னாரு. 6, 7 வரிகள் இருந்தது. ஒரே டேக்கில் முடிச்சாச்சு . அந்த சம்வத்திற்கு பிறகு எனக்கு வெங்கடேஷ் சார் வாய்ப்பு கொடுக்கவே இல்லை“ என்றார் டெலிஃபோன் ராஜ்.