![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ajith: விடாமுயற்சியா? குட் பேட் அக்லியா? இன்னும் சற்று நேரத்தில் அஜித் பட அப்டேட் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
அஜித்குமார் படத்தின் அப்டேட் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.
![Ajith: விடாமுயற்சியா? குட் பேட் அக்லியா? இன்னும் சற்று நேரத்தில் அஜித் பட அப்டேட் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் tamil famous actor ajithkumar movie latest update 7.21 PM Today know full details Ajith: விடாமுயற்சியா? குட் பேட் அக்லியா? இன்னும் சற்று நேரத்தில் அஜித் பட அப்டேட் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/11/8b1c661bf653fbf77f65cf6b1da5d8671723372995088102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.
இன்னும் சற்று நேரத்தில் அப்டேட்:
நீண்ட நாட்களாக விடாமுயற்சி படத்தின் அப்டேட் ஏதும் வெளியாகாமல் இருந்த நிலையில், சமீபகாலமாக விடாமுயற்சி படத்தின் அப்டேட் தொடர்ந்து வெளியாகி வருகிறது. விடாமுயற்சி படத்துடன் சேர்த்து குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்டும் அவ்வப்போது வெளியாகி அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், சுரேஷ் சந்திரா அவரது ட்விட்டர் பக்கத்தில் 7.21 pm என்று பதிவிட்டுள்ளார். இதனால், அஜித் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அது விடாமுயற்சி படத்தின் அப்டேட்டா? குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்டா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
7.21 pm
— Suresh Chandra (@SureshChandraa) August 11, 2024
விடாமுயற்சியா? குட் பேட் அக்லியா?
மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் ரெஜினா கசாண்ட்ரோவும் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து சஞ்சய்தத், அர்ஜூன், த்ரிஷா, ஆரவ் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் அஜர்பைஜானில் நடைபெற்றது, இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ராடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் தீபாவளி வெளியீடாக ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்:
வழக்கமாக அஜித் படங்களின் அப்டேட்கள் அடிக்கடி வெளியாகாமல் இருக்கும் சூழலில், விடாமுயற்சி படத்தின் அப்டேட் தற்போது அடிக்கடி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. மறுபுறம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்டும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. குட் பேட் அக்லி படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. குட் பேட் அக்லி படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் படம் தயாரிக்கிறது. இந்த படங்களுக்கு பிறகு அஜித்குமார் கே.ஜி.எஃப். இயக்குனரின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சற்று நேரத்தில் அஜித்குமாரின் பட அப்டேட் வர இருப்பதால் எக்ஸ் தளத்தில் அஜித்குமார் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)