மேலும் அறிய

31 years of vijayism: தடைகளை தகர்த்தெரிந்த உச்ச நட்சத்திரம்...இத்தனை தடைகளை தாண்டி வந்து திரையில் ஜொலிக்கும் விஜய்...

நடிகர் விஜய் தனது திரை பயணத்தில் 32-வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கின்றார். அவரது திரைப்பயணம் குறித்த ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

நடிகர் விஜய், 1992-ல்  ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அவதாரம் எடுத்தார். நாளைய தீர்ப்பு படம் மூலம் விஜய் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் அவரை ஒரு நடிகராக பெரிய அளவில் அங்கீகரித்த திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக திரைப்படம் தான். விக்ரமன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் மூலம் விஜய்க்கு பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச் கிடைத்தது. இன்று இந்த படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் அதை பார்க்க ரசிகர் கூட்டம் உள்ளது.

இதே பாணியில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து 1997ல் வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  1999-ஆம் ஆண்டு வெளியான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படமும் விஜய்யின் மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்தியது.

2003ஆம் ஆண்டில் வெளியான திருமலை திரைப்படம் தான் விஜய்யை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. ஆம் இந்த படம் தான் அவரை ஆக்‌ஷன் ஹீரோ-வாக உயர்த்தியது.  இதனை அடுத்து வெளியான கில்லி படமும்,  போக்கிரி படமும் விஜய்யை முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது. 2011-ஆம் ஆண்டு வெளியான காவலன் திரைப்படம் இவரின் படங்கள் ஒரே மாதியாக உள்ளது என்ற விமர்சனங்களை தகர்த்தெரிந்தது. மேலும் இப்படத்தில் விஜயின் எதார்த்த நடிப்பு அப்ளாசை அள்ளியது. 

இதனையடுத்து துப்பாக்கியில் ஆரம்பித்த புதிய பயணம், வசூல் ரீதியாக விஜய்யை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றது. இதனையடுத்து கத்தி, மெர்சல், தெறி என இவரின் நடிப்பில் பல வெற்றிப் படங்கள் வெளியாகின. நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இவரின் திரைப்படங்கள் சுமாராகவே இருந்தாலும் விஜய்-க்காவே தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது.  

விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என விவாதம் செய்யும் அளவிற்கு உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். திரையுலகில் அடியெடுத்து வைத்த ஆரம்ப காலக்கட்டத்தில் உருவக்கேலிக்கும் விமர்சனததிற்கும் உள்ளான விஜய், இன்று  தவிர்க்கமுடியாத சக்தியாக உயர்ந்து நிற்கிறார். வெற்றிகரமாக தனது திரை பயணத்தில் 32-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விஜயை அவரின் கோடான கோடி ரசிகர்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறது ஏபிபி நாடு. 

மேலும் படிக்க 

Vijayakanth: ‘விஜயகாந்த் காய்ச்சல், தலைவலினு படுத்தது இல்லை.. கம்பீரமா வா நண்பா..’ வாகை சந்திரசேகர் உருக்கம்!

IND Vs AUS LIVE Score: ஆஸ்திரேலியாவின் ஃபயர் பவுலிங்; அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா

திண்டுக்கல் வெள்ள விநாயகர் கோயிலில் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தேமுதிகவினர் வழிபாடு

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Embed widget