மேலும் அறிய

IND Vs AUS LIVE Score: பரபரப்பான ஆட்டம்; 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

India Vs Australia 5th T20 Live Updates: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி குறித்த லைவ அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

LIVE

Key Events
IND Vs AUS LIVE Score: பரபரப்பான ஆட்டம்; 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

Background

IND Vs AUS 5th T20: பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா டி-20 தொடர்:

அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, தற்போது இந்தியா உடன் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளயாடி வருகிறது. மூத்த வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் பிசிசிஐ வாய்ப்பளித்துள்ளது. நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளில், இந்திய அணி மூன்றில் வெற்றி பெற்று 3-1 என தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி மற்றும் 5வது டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்:

அதன்படி, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதன் நேரலையை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்ட சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி கடைசி போட்டியிலும் வெற்றி பெற தீவிரம் காட்டுகிறது. அதேநேரம், ஆறுதல் வெற்றியை பெற ஆஸ்திரேலியாவும் மல்லுக்கட்டுகிறது. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

பலம் - பலவீனங்கள்:

ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் வாய்ந்த இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். உள்ளூர் மைதானங்களில் போட்டி நடைபெறுவது அவர்களுக்கு கூடுதல் சாதகமாக உள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள நான்கு போட்டிகளிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ரிங்கு சிங் அதிரடியான பினிஷிங்கை தொடர்ந்து வழங்கி வருகிறார். முதல் 3 போட்டிகளில் ரன்களை வாரிக்கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள், ராய்பூர் போட்டியில் சிக்கனமாக ரன்களை கொடுத்து தொடரை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தனர். மறுமுனையில்,  ஆஸ்திரேலிய அணி நிலைத்து நின்று ஆடக்கூடிய அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இன்றி திணற் வருகிறது.  அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இருப்பதும், ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இன்றைய போட்டியிலாவது அவர்களது பந்துவீச்சு எடுபடுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

மைதானம் எப்படி?

பெங்களூரு சின்னசாமி மைதானம் அளவில் சிறியது என்பதால் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருக்கும். இதனால், பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்த மிகுந்த சிரமப்படுவர். பனியும் போட்டியின் இரண்டாம் பாதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதனை கருத்தில் கொண்டு டாஸ் வெல்லும் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்ச தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளது. 

உத்தேச அணி விவரம்:

இந்திய அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரின்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா/ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்

ஆஸ்திரேலியா:

மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மாட், டிம் டேவிட், ஆரோன் ஹார்டி, மேத்யூ வேட் (கேப்டன்),  கிரீன், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், நாதன் எல்லிஸ், தன்வீர் சங்கா, கேன் ரிச்சர்ட்சன்

22:33 PM (IST)  •  03 Dec 2023

IND Vs AUS LIVE Score: பரபரப்பான ஆட்டம்; 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது.

22:07 PM (IST)  •  03 Dec 2023

IND Vs AUS LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றிய முகேஷ்

முகேஷ் தான் வீசிய 17வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

22:04 PM (IST)  •  03 Dec 2023

IND Vs AUS LIVE Score: 6வது விக்கெட்டினை இழந்த ஆஸி

ஆஸ்திரேலியா அணி தனது 6வது விக்கெட்டினை இழந்தது. ஷார்ட் தனது விக்கெட்டினை 16 ரன்னில் வெளியேறினார். 

21:55 PM (IST)  •  03 Dec 2023

IND Vs AUS LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது - அரைசதம் கடந்த டெர்மாட் அவுட்

15 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் சேர்த்துள்ளது. டெர்மாட் 36 பந்தில் 54 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 

21:51 PM (IST)  •  03 Dec 2023

IND Vs AUS LIVE Score: அரைசதத்தை கடந்த டெர்மோட்

சிறப்பாக விளையாடி வரும் டெமோர்ட் 34 பந்தில் 53 ரன்கள் சேர்த்து அரைசதம் கடந்துள்ளார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget