Kamalhassan Birthday Party : ஆழ்வார்பேட்டை ஆண்டவர் சரணம்.... கமலின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட பிரபலங்கள்
உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் பார்ட்டியில் பல்வேறு தமிழ் சினிமாவின் பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்
கம்லஹாசன் பிறந்தநாள்
தமிழ் சினிமவில் 64 ஆண்டுகளாக பயணித்து வரும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ், இந்தி, கன்னடம் , மளையாலம் திரையுலக பிரபலங்கள், சமூக வலைத்தளங்கள் வாயிலாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இப்படியான நிலையில் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் உபகரணத்தை திறந்து வைத்தார்.
கமல் படங்களின் அடுத்தடுத்த அப்டேட்கள்
கமலின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் கமல் நடித்து வரும் நடிக்க இருக்கும் படங்களின் அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து உருவாகி இருக்கும் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து நேற்று மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இன்று கமல் வில்லனாக நடித்து வரும் கல்கி 2898 படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. தனது 69 ஆவது பிறந்தநாளை ஒரு சிறிய பார்ட்டி ஏற்பாடு செய்து கமல் கொண்டாடி இருக்கிறார். இந்த நிகழ்வில் தனக்கு நெருக்கமானவர்கள் அனைவரையும் கமல் அழைத்திருக்கிறார்.,
கமல் படங்கள் ரீரிலீஸ்
இதனிடையே கமலின் வெற்றி விழா, விருமாண்டி, அன்பே சிவம் ஆகிய சூப்பர்ஹிட் படங்கள் மீண்டும் ரீ- ரிலீஸ் ஆகியுள்ளது. திரையுலகினரே ஆச்சரியப்படும் வகையில் இந்த படங்களின் காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளது.
பார்ட்டியில் கலந்துகொண்ட பிரபலங்கள்
Suriya na at @ikamalhaasan sir's birthday party along with Amir Khan and DOP Ravi Chandran ♥️
— Suriya Fans Club (@SuriyaFansClub) November 7, 2023
Wishing Ulaga Nayagan Kamal Haasan Sir, a very happy b'day on behalf of @Suriya_offl fans!#Kanguva #HBDUlagaNayagan pic.twitter.com/P8ZQecQWby
View this post on Instagram
இந்த பார்ட்டியில் பாலிவுட் நடிகர் அமீர் கான் , நடிகர் சூர்யா, நரேன், ஆர் பார்த்திபன், நடிகை குஷ்பு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். மேலும் ஒளிப்பதிவாளர் ரவிக் கே சந்திரன் உள்ளிட்ட பல தொழில் நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டார்கள். இந்த பார்ட்டியில் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகின்றன.