Ajith Kumar : ”காதுகளை பத்திரமா பார்த்துக்கோங்க” : அஜித் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
'உங்கள் காதுகளை பாதுகாத்து கொள்ளுங்கள்', என்று அஜித் குமார் சார்பாக அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது வைரல் ஆகி வருகிறது.
இவர் தற்போது நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹச் வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்து அஜித் 61 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாயகியான மஞ்சுவாரியர் முக்கிய தோற்றத்தில் நடிக்கும் இந்த படம் வங்கி கொள்ளை தொடர்பான கதைகளத்தை கொண்டிருப்பதாகவும் இதில் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்தில் அஜித் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும், விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் துவங்கும் நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பொது நலன் கருதி…
இந்த நிலையில், பொது நல நோக்கத்துடன் நடிகர் அஜித்குமார் மக்களுக்கு ஒரு அறிவுரை கூறியுள்ளார். சுரேஷ் சந்திரா அஜித் சொன்னதாக கூறியுள்ள அந்த அறிவுரையில் மக்கள் தங்கள் காதுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு ஒரு ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்த அவர், அதில் ரிங்கிங் இனி எர்ஸ் என்ற உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனை ஒன்றிற்கு கூகுள் விளக்கம் இடம்பெற்று இருந்தது. காதுகளில் ஒரு வித சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால், காதுகளுக்கு பாதிக்கப்பட்டு இருக்கும். எனவே மக்கள் அதனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
காதுகளில் தொடர் சத்தம்
அந்த பிரச்சனை, அதிக சத்தங்களை அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பதாலும், தலையில் அடிபடுவதாலும், சில மருத்துவ பின் விளைவுகளாலும் ஏற்படலாம் என அதில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக காதுகளில் சத்தம் கேட்டால், அதை உடனடியாக கவனிக்கவும் என அஜித் அக்கறையுடன் கூறியுள்ளார். பொதுநல நோக்கத்தோடு அஜித் கூறியுள்ள ஆலோசனை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த தகவலை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டிருக்கிறார்.
ஏகே61 & ஏகே62 அப்டேட்
தற்போது அஜித் நடித்து வரும் ஏகே61 படத்தின் டைட்டில் இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அப்டேட் வரும் என காத்திருந்து ரசிகர்கள் டயர்டாகிவிட்டனர். விரைவில் தலைப்புடன் அப்டேட் வருமென்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அடுத்ததாக நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இரு படங்களுக்கு இடையே பெரிதாக பிரேக் எடுத்து பிறகு ஷூட்டிங் செல்லும் வழக்கம் கொண்ட அஜித் குமார் இம்முறை முன்பே பல நாடுகளுக்கு பைக் பயணம் செய்து திரும்பி விட்டதால், உடனடியாக அடுத்த பட வேலைகள் ஆரம்பிக்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கசிகின்றன. ஆனாலும் படத்தின் இடையில் ஒரு ட்ரிப் போக பிளான் வைத்துள்ளாராம் அஜித்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்