மேலும் அறிய

Sylvester Stallone: சக நடிகர் மரணம்.. கண்கலங்கிய சில்வெஸ்டர் ஸ்டாலோன் - ரசிகர்கள் சோகம்!

ராக்கி படத்தில் நடித்த நடிகர் கார்ல் வெதர்ஸின் மறைவைப் பற்றி உருக்கமாக பேசியுள்ளார் ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோன்

ராக்கி படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த கார்ல் வெதர்ஸ் பற்றி பேசும் போது நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோ கண் கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில்வெஸ்டர் ஸ்டாலோன்

ஹாலிவுட் சினிமாவிற்கு வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படங்களில் முக்கியமானது ராக்கி. சில்வெஸ்டர் ஸ்டாலோன் கதாநாயகனாக நடித்த இந்தப் பட வரிசைக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். குத்துச் சண்டையை மையமாக வைத்து வெளியானப் படங்களில் கமர்ஷியல் ரீதியாக ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒரு படமாக இன்றுவரை ராக்கி படம் இருக்கிறது.  இன்று  மார்வெல் வெளியிடும் சூப்பர்ஹீரோ படங்களைப் போல் அடுத்தடுத்து ஐந்து பாகங்கள் வெளியாகி தொடர் வெற்றிகளைக் கண்டது ராக்கி பட வரிசை. இந்தப் படங்களின் மூலம் ஹாலிவுட் சினிமாவில் என்றென்றைக்கும் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் சில்வெஸ்டர் ஸ்டாலோன். 

எதிர்பாராத சோகம்

ராக்கி படத்தின் முதல் பாகத்தில் சில்வெஸ்டர் ஸ்டாலோன் உடன் இணைந்து நடித்து பாராட்டுக்களைப் பெற்ற மற்றொரு நடிகர் கார்ல் வெதர்ஸ். இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் இருவருக்கும் இடையிலான குத்துச் சண்டைக் காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்தன. கார்ல் வெதர்ஸ் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தனது 76 வயதில் உயிரிழந்தார். அவர் தூக்கத்தில் இறந்ததாக அவரது குடும்பத்தினர் சார்பாக தெரிவிக்கப்பட்டது. 

சமீபத்தில் ஜிம்மி ஃபாலன் தொகுத்து வழங்கும் “ தி டுநைட் ஷோ’ வில் கலந்துகொண்ட சில்வெஸ்டர் ஸ்டாலோன் தனக்கும் கார்ல் வெதர்ஸ்க்கும் இடையிலான பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அவரைப் பற்றி பேசும்போது அவர் கண் கலங்கியுள்ள காட்சி ரசிகர்களையும் கலங்க வைத்துள்ளது.

திறமை, அறிவு எல்லாம் அவரிடம் இருந்தது

ராக்கி படத்தில் அப்போல்லோ கிரீட் கதாபாத்திரத்திற்காக தான் ஆடிஷன் செய்துவந்தபோது  தயாரிப்பு நிறுவனம் கார்ல் வெதர்ஸை அழைத்து வந்ததாக அவர் தெரிவித்தார். உள்ளே நுழையும் போதே கடுகடுப்பான முகத்துடன் கார்ல் வந்தார் என்று சில்வெஸ்டர் கூறினார். இதனைத் தொடர்ந்து இருவரும் பேசி நெருங்கிய நண்பர்களான கதையை அவர் விவரித்தார். ராக்கி படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் அந்தப் படத்தில் நடிப்பதற்காகவே பிறந்தவர்கள் என்று அவர் கூறினார். அப்போல்லோவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு திறமையான , வேகம்., விவேகம், உடலுறுதி என எல்லாம் இருக்கும் ஒரு நபர் தனக்கு தேவைப்பட்டார் அந்த குனங்கள் அனைத்து கார்லிடம் இருந்ததாக சில்வெஸ்டர் ஸ்டாலோன் தெரிவித்தார்.”

மேலும் ராக்கி படத்திற்காக தானும் கார்ல் வெதர்ஸும் பயிற்சி எடுத்துக்கொள்ளும் வீடியோ ஒன்றையும் சில்வெஸ்டர் ஸ்டாலோன் பகிர்ந்துகொண்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Embed widget