யாருடா அவன்.. என் பொண்டாட்டிய லவ் பண்ணுறேன்னு சொன்னது? ஜோதிகாவுக்காக சண்டைக்கு போன சூர்யா!
சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது மனைவிக்கு கோபம் கொண்ட சூர்யா ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று சண்டை சென்ற சம்பவம் நடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. என்ன தான் சினிமாவில் இவர் பிசி நடிகராக வலம் வந்தாலும், இவர் நடிக்கும் ஹிட் படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தால் கம்மி தான். சூர்யா ஹிட் கொடுத்து பல வருடங்கள் கடந்த நிலையில், இந்த மாதம் வெளியான 'ரெட்ரோ' கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் முதலுக்கு மோசம் இல்லாத வெற்றியை பெற்றது.
ரெட்ரோ திரைப்படம் இது வரை ரூ. 150 கோடி வசூலை எட்டியதாக கூறப்பட்டாலும், இதுகுறித்த எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. சூர்யா சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் போதே, வட நாட்டு நடிகையான, ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஒப்புக்கொண்ட சில படங்களை மட்டுமே நடித்து கொடுத்த ஜோதிகா, பின்னர் திரையுலகில் இருந்து முழுமையாக விலகினார்.

சூர்யா - ஜோதிகா தம்பதிகளுக்கு தியா - தேவ் என இரு குழந்தை பிறந்த பிறகு, நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே படம் மூலமாக மீண்டும் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வரும் ஜோதிகா, கணவர் சூர்யா மற்றும் குழந்தைகளுடன் ஒரேயடியாக மும்பையில் செட்டில் ஆகி உள்ளார். தமிழ் சினிமாவைத் தவிர்த்து பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் சூர்யா மற்றும் ஜோதிகா குறித்து ராட்சசி மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் கமலேஷ் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அதில் ராட்சசி படத்தின் போது, சூர்யா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். கதிர் யார் (ராட்சசி படத்தில் கமலேஷ் கதாபாத்திரம்) என்று கேட்டார். மேலும், அவனை கூப்பிடுங்க என்றதும் ...நான் அவர் முன் சென்று நின்றேன். என்ன என்னுடைய மனைவியை சைட் அடிக்கிறியாம், லவ் பண்ணுறியாமீ? எப்போ பார்த்தாலும் உன்னை பற்றி தான் பேசுகிறார்.... என்றதும் எனக்கு பயம் வந்துடுச்சு.நான் இல்ல சார் அப்படி நடிக்க சொன்னாங்க, நானும் நடிச்சேன் என கூறினேன்.
அதற்கு சூர்யா சார், சும்மாடா உன்ன மிரட்டினேன் நீ பயந்துட்ட என சிரித்தார். மேலும் என்னுடைய பிறந்தநாளுக்கு ஜோதிகா மேடம் பிரியாணி போட்டார். அவர் என் மீது மிகவும் பாசமாக இருப்பார் எனகூறினார். கமலேஷ் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் தனது எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ள குழந்தை நட்சத்திரமாக இப்போது உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















