மேலும் அறிய

”வேண்டாம் என நினைத்தேன்; இதற்காகத்தான் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தை ஒப்புக்கொண்டேன்” - சூர்யா

கமல்ஹாசனுக்காக மட்டுமே ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததாக மனம் திறந்து கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

நடிகர் கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகி மிகப்பெரும் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியைப் பெற்றது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்த விக்ரம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அனிருத் இசையமைத்திருந்த விக்ரம் படம் உலகளவில் ரூ.400 கோடிக்கும் வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்தது. இதுவரையில் தமிழ் சினிமா வரலாற்றில் அதிகப்படியான வசூலை ஈட்டிய திரைப்படமாக திகழ்கிறது ’விக்ரம்’ திரைப்படம். 

இந்தப் படத்தில் கொடூர வில்லனாக கடைசி சில நிமிடஙக்ள் திரையில் தோன்றி மாஸ் காட்டியிருப்பார் நடிகர் சூர்யா. இதுவரை அவர் தோன்றாத கதாபாத்திரம். யாருமே சற்றும் எதிர்பார்த்திராத கதாபாத்திரத்தை செய்திருப்பார் சூர்யா. ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைத்த அபார வரவேற்பை அடுத்து நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ரூ.47 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்சை நடிகர் சூர்யாவுக்குப் பரிசாக கொடுத்திருந்தார்.

இந்நிலையில் அண்மையில் நடந்த 2022 ஃபிலிம் ஃபேர் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சூர்யா. விழாவில் அவருக்கு சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. அவர் அந்த விருதை வாங்க மேடையேறி வந்தபோது ரசிகர்கள் ரோலக்ஸ், ரோலக்ஸ், ரோலக்ஸ் என்று உற்சாகக் குரல் எழுப்பினார்கள். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரமேஷ் அரவிந்த், சூர்யாவிடம் ரோலக்ஸ் மீண்டும் திரைக்கு திரும்புவாரா என்று கேள்வி கேட்டார். அதற்கு சூர்யா, இதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்றார். மேலும் அவர் கூறுகையில், ஒருவேளை ரோலக்ஸ் கதாபாத்திரம் என்னைத் தேடிவந்தால் அதைச் செய்வேன் என்றார்.

இதனைக் கேட்டு அரங்கமே உற்சாகத்தில் அதிர்ந்தது. ரோலக்ஸ் கதாபாத்திரம் பற்றி மேலும் அவர் பேசும்போது, ”நான் அந்த கதாபாத்திரத்தை கமல்ஹாசன் சாருக்காக மட்டுமே செய்தேன். நான் இன்று என்னவாக இருக்கிறேனோ என்னவெல்லாம் செய்கிறேனோ அதில் எல்லாவற்றிலும் கமல் சாரின் தாக்கம் இருக்கும். அவரிடமிருந்தே ஊக்கம் பெற்றேன். அவர் என்னை அழைத்து ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்ன போது அதை மறுத்துவிட நான் நினைக்கவில்லை. நீங்கள் எப்போது அச்சப்படுகிறீர்களோ அப்போது தான் நீங்கள் ஒரு பெரிய வெற்றிக்கு தயாராகுகிறீர்கள் என்று அர்த்தம். ரோலக்ஸ் பாத்திரத்தை நான் ஏற்றது கடைசி நிமிட முடிவுதான். நான் லோகேஷ் கனகராஜை அழைத்து நான் ரோலக்ஸ் கேரக்டரை செய்யவில்லை என்று சொல்லவே நினைத்தேன். ஆனால் கமல்ஹாசன் சாருக்காக மட்டுமே அந்த கதாபாத்திரத்தை ஏற்றேன்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!

TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?

Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..

ABP Premium

வீடியோ

P Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN AssemblyEPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORT

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ

TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்

வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்

ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!

Embed widget