Suriya on Twitter: ஜெய் பீம்: இந்த அன்பு அலாதியானது... உருகி ட்விட் செய்த சூர்யா!
அன்பர்களே, #Jaibhim மீதான இந்த அன்பு அலாதியானது. இதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை - சூர்யா
ஜோதிகா & சூர்யா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஜெய்பீம். பத்திரிகையாளர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் சமூகத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியிருக்கிறது. மேலும் அதிகாரவர்க்கத்தின் கோர முகத்தை எந்தவித ஒளிவு மறைவுமின்றி மக்களிடம் எடுத்து வைத்திருக்கிறது.
ஆனால் ஜெய்பீம் படம் வன்னியர் சமுதாயத்தை இழிவுப்படுத்திவிட்டதாக வன்னியர் சங்கம் சார்பாக சூர்யா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதுமட்டுமின்றி சூர்யா எங்கும் நடமாட முடியாது எனவும், அவரை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் பாமக மாவட்ட செயலாளர் பேசியதும், அதற்கு ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் மௌனம் காப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சூர்யா மீது வன்னியர்கள் தரப்பில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குநர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், அமீர், வெற்றிமாறன் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். நடிகர்களில் கருணாஸ், சத்யராஜ் உள்ளிட்டோரை தவிர்த்து சூர்யாவின் சமகால நடிகர்கள் இதுவரை யாரும் வாய் திறக்கவில்லை.
இதற்கிடையே சூர்யாவுக்கும், அவரது வீட்டுக்கும் ஆயுதம் ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Dear all, this love for #Jaibhim is overwhelming. I’ve never witnessed this before! Can’t express in words how thankful I am for the trust & reassurance you all have given us. Heartfelt thanks for standing by us ✊🏼
— Suriya Sivakumar (@Suriya_offl) November 17, 2021
இந்நிலையில் இந்த விவகாரங்கள் குறித்து மௌனம் காத்துவந்த சூர்யா தற்போது ட்வீட் செய்துள்ளார். அவர் செய்துள்ள ட்வீட்டில், “அன்பர்களே, #Jaibhim மீதான இந்த அன்பு அலாதியானது. இதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை! நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Jai Bhim Issue: இயக்குநர்கள் ஒகே.. சூர்யாவுக்காக வாய்திறக்காத ரீல் ஹீரோக்கள்.. கோலிவுட் சைலன்ஸ்!