சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் முத்து பட காட்சி ப்ரெஞ்ச் படம் ஒன்றில் உள்ளது. இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்பவர் ரஜினிகாந்த். கடந்த 40 ஆண்டுகளாக சூப்பர்ஸ்டாராக திகழும் அவருக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டார் என்று உலகம் முழுவதும் உள்ள பலரும் ரஜினிகாந்தை கொண்டாடி வருகின்றனர்.
ப்ரெஞ்சு படத்தில் ரஜினி:
இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டிலும் ரஜினிகாந்திற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ரஜினி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற முத்து படம் ஜப்பானில் ப்ளாக்பஸ்டர் ஹிட் வெற்றி பெற்றது. ப்ரெஞ்ச் படம் ஒன்றில் ரஜினியின் முத்து படத்தின் காட்சி இடம்பிடித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2006ம் ஆண்டு ப்ரெஞ்சில் வெளியான படம் ப்ரீட்டி- மொய் டா மெயின். ப்ரெஞ்ச் மொழியின் பிரபல இயக்குனர் எரிக் லார்டிகாவ் இயக்கிய இந்த படத்தில் அலெய்ன் சாபத், சார்லட் கெய்ன்ஸ்பார்க், பெர்னாடெடட் லாபோனன்ட் நடித்துள்ளனர்.
முத்து
இந்த படத்தின் ஒரு காட்சியில் நாயகன் உணவுப்பொருளை எடுத்து வைத்துக் கொண்டிருப்பான். அப்போது, நாயகி தொலைக்காட்சியில் படம் ரஜினியின் படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருப்பாள். அப்போது, நாயகி எனக்கு இந்த காட்சி மிகவும் பிடிக்கும் என்று கூறுவாள். அதற்கு நாயகன் என்ன படம் என்று கேட்பான்? அதற்கு நாயகி முத்து. அழகான இந்திய படம் என்று கூறுவாள்.
நாயகி முத்து என்று கூறும்போது ரஜினி முத்து படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் துண்டை இடுப்பில் கட்டும் காட்சி காடப்படும். பின்னர், நாயகனும், நாயகியும் அமர்ந்து சாப்பிடும்போது பின்னால் தொலைக்காட்சியில் முத்து படம் ஓடிக்கொண்டிருக்கும்.
2006ம் ஆண்டு வெளியான ப்ரெஞ்சு படத்தில் 1995ம் ஆண்டு வெளியான ரஜினியின் முத்து படத்தின் காட்சி இடம்பிடித்துள்ளது. ரஜினிகாந்தின் திரை செல்வாக்கு மட்டுமின்றி தனிப்பட்ட செல்வாக்கும் மிகவும் அதிகம் ஆகும். இந்தியாவில் உள்ள பல மாநில முதலமைச்சர்களை நேரடியாக தொடர்பு கொள்ளும் அளவிற்கு மிகவும் செல்வாக்கானாவர். முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவிற்கு நெருக்கமானவர். பிரதமர் மோடிக்கும் நெருக்கமானவர் ஆவார்.
மெகா ப்ளாக்பஸ்டர்
கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ரஜினியின் முத்து படம் ப்ரெஞ்சு படத்தில் இடம்பிடித்திருந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 1975ம் ஆண்டு முதல் நடித்து வரும் ரஜினிக்கு 1994ம் ஆண்டு வெளியான பாட்ஷா படம் பெரும் புகழையும், செல்வாக்கையும் பெற்றுத் தந்தது. தளபதி, மன்னன், அண்ணாமலை, எஜமான், உழைப்பாளி, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா ரஜினி 90 முதல் 2000 காலகட்டம் வரை தொட்டதெல்லாம் வெற்றி என மெகா ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்தார். பாபா தோல்விக்கு பிறகு அவர் நடித்த சந்திரமுகி படம் பிராம்மாண்ட வெற்றி பெற்றது. ரஜினி தற்போது கூலி, ஜெயிலர் 2 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.