மேலும் அறிய

Rajinikanth : திடீரென ஆளுநரை சந்தித்த ரஜினிகாந்த்: பரபரப்பு பின்னனி என்ன?

பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட்டுள்ளதற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது,

“ ஆளுநரிடம் அரசியல் பற்றி விவாதித்தேன். ஆனால், அதைப் பற்றி இப்போது பகிர முடியாது.  தமிழ்நாட்டில் உள்ள ஆன்மீக உணர்வுகள் ஆளுநருக்கு மிகவும் பிடித்துள்ளது. அரசியலுக்கு மீண்டும் வரும் எண்ணம் இல்லை.” என்று கூறியுள்ளார்.

Rajinikanth : திடீரென ஆளுநரை சந்தித்த ரஜினிகாந்த்: பரபரப்பு பின்னனி என்ன?

பின்னர், ரஜினிகாந்திடம் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆளுநரிடம் ஆலோசனை நடத்தினீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த் தற்போது ஏதும் அதைப்பகிர முடியாது என்று கூறினார். பின்னர், ரஜினிகாந்திடம் பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. உயர்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், தற்போது ஏதும் கருத்து இல்லை என்று கூறிவிட்டுச் சென்றார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றார். அங்கு ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகிய நிலையில், ரஜினிகாந்த் மீண்டும் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவர் உடனடியாக ராஜ்பவனுக்கு நேரில் சென்று ஆளுநர்  ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth : திடீரென ஆளுநரை சந்தித்த ரஜினிகாந்த்: பரபரப்பு பின்னனி என்ன?

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று நீண்ட ஆண்டுகளாக எதிர்பார்த்து வந்த ரசிர்களுக்கு, அரசியலுக்கு வருவதாக 2018ம் ஆண்டு ரஜினிகாந்த் அறிவித்தார். சட்டசபை தேர்தல் நெருங்கிய வேளையில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் அரசியலுக்கு வர மாட்டேன் என்று ரஜினிகாந்த் அறிவித்தார். அவரது அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இதன்பின்னர், அவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் சுமாரான வெற்றியை பெற்றது. தற்போது, ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 15-ந் தேதி முதல் தொடங்க உள்ளதாக ரஜினிகாந்த் தகவல் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : Rajini: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்திப்பு.. என்ன காரணம்?

மேலும் படிக்க : GST Hike: பால்,தயிர்க்கு GST வரி எதற்கு? கோமியத்திற்கு 50% GST ஏற்றிக்கொள்ளுங்கள் - மக்களவையில் எம்.பி செந்தில்குமார் ஆவேசம்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை

Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி

Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?

பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!

Embed widget