GST Hike: பால்,தயிர்க்கு GST வரி எதற்கு? கோமியத்திற்கு 50% GST ஏற்றிக்கொள்ளுங்கள் - மக்களவையில் எம்.பி செந்தில்குமார் ஆவேசம்
GST Hike: குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பால் தயிருக்கு GST வரி எதற்கு? வேண்டுமானால் கோமியத்திற்கு 50% GST கூட ஏற்றிக்கொள்ளுங்கள் என மக்களவையில் திமுக எம்.பி செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
![GST Hike: பால்,தயிர்க்கு GST வரி எதற்கு? கோமியத்திற்கு 50% GST ஏற்றிக்கொள்ளுங்கள் - மக்களவையில் எம்.பி செந்தில்குமார் ஆவேசம் GST Hike: Why GST tax on milk, curd? Charge 50% GST on Cow Urine; MP Senthilkumar is obsessed with Lok Sabha GST Hike: பால்,தயிர்க்கு GST வரி எதற்கு? கோமியத்திற்கு 50% GST ஏற்றிக்கொள்ளுங்கள் - மக்களவையில் எம்.பி செந்தில்குமார் ஆவேசம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/07/ef42b7bbe5c330f8ed82940b406e28031659835722_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
GST Hike: குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பால் தயிருக்கு GST வரி எதற்கு? வேண்டுமானால் கோமியத்திற்கு 50% GST கூட ஏற்றிக்கொள்ளுங்கள் என மக்களவையில் திமுக எம்.பி செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் GST கவுன்சிலின் 47வது கூட்டம் நடைபெற்றதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் அத்தியாவசிய பொருட்களின் மீது 5% GST விதிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த GST விகித உயர்வு ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால், மக்களவையில் எதிர்கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் குளிர்கால கூட்டத்தொடர் என்பது முறையாக நடைபெறாமல் இருந்தது. எதிர் கட்சியினரின் தொடர் அழுத்தத்தால், தனது முடிவில் இருந்து பின் வாங்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரிசி கோதுமை பொருட்கள் மீது விதிக்கப்பட்ட GST திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தார். ஆனால் அத்தியாவசியப் பொருட்களாக இருக்கக் கூடிய பால், தயிர் போன்ற பொருட்கள் மீதான GST வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (05/08/2022) காங்கிரஸ் கட்சியினர் கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். இதனால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குழந்தைகள்,பொதுமக்கள் பயன்படுத்தும் பால். தயிருக்கான GST வரி எதற்கு.
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) August 6, 2022
கோமியதிற்கு 50% GSTகூட ஏற்றி கொள்ளுங்கள்.#Tamil_voiceover#தமிழாக்கம் pic.twitter.com/TU3s7VHMfm
இந்நிலையில், திமுகவின் தர்மபுரி மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் மக்களவையில், மக்களின் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பால் தயிருக்கு GST வரி எதற்கு? வேண்டுமானால் கோமியத்திற்கு 50% GST கூட ஏற்றிக்கொள்ளுங்கள் என ஆவேசமாக பேசியுள்ளார். அவர் பேசுகையில், சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக இருக்கக் கூடிய பால், தயிர் போன்ற பொருட்களின் மீது 5% GST என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால், நரேந்திர அரசு ஒரு பொருளின் மீது GST வரியை 50% கூட ஏற்றிக்கொள்ளங்கள். அதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை, அந்த பொருள் மாட்டுக் கோமியம் என அவர் ஆவேசமாக பேசியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், திராவிட மாடலை நாடு முழுவதும் அமல் படுத்த வேண்டும், அது ஏழை மக்களுக்கானந்து, விளிம்புநிலை மக்களுக்கானது. அதனால் தான் திராவிட மாடலை நாடு முழுவதும் அமல்படுத்திட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என செந்தில் குமார் எம்.பி பேசியுள்ளார்.
இந்த பேச்சின் தமிழாக்கம் செய்யப்பட்ட தொகுப்பினை மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் அவர்கள், அவருடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.
GST கவுன்சிலின் 47வது கூட்டம் பற்றிய சில தகவல்கள்
அண்மையில் GST கவுன்சிலின் 47வது கூட்டம் நடைபெற்றதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் அத்தியாவசிய பொருட்களின் மீது 5% GST விதிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த GST விகித உயர்வு ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் மீது GST வரி :
பிராண்டிங் மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட தயிர், பால், பன்னீர், லஸ்ஸி, சீஸ், கோதுமை மாவு, அரிசி, வெள்ளம், தென், அப்பளம், மீன், இறைச்சி போன்ற பல அத்தியாவசிய பொருட்களின் மீதும் இந்த GST வரி விதிக்கப்படுவதால் அதன் விலை உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருப்பினும் இந்த 5% GST விதிப்பானது, பிராண்டிங் மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களுக்கு மட்டும் தான் பொருந்தும். பிராண்டிங் மற்றும் பேக்கிங் செய்யப்படாத பொருட்களில் எந்த GST வரியும் விதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
லீகல் மெட்ராலஜி சட்டத்தின் படி முன்னரே பேக்கிங் செய்யப்பட்ட அல்லது லேபிளிடப்பட்ட தயிர், மோர் மற்றும் பன்னீர் ஆகிய பொருட்களின் மீது முன்னர் விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பொருட்களின் மீதும் ஜூலை 18ம் தேதி முதல் 5% GST விதிக்கபடும் என கிளியர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அர்ச்சித் குப்தா தெரிவித்தார்.
GST குறைக்கப்பட்ட பொருட்கள்:
GST விகிதம் திருத்தப்பட்டதால் சில பொருட்களின் விலை உயர்ந்தாலும் சில பொருட்களின் விலை சற்று குறையவும் வாய்ப்புள்ளது. விற்பனையாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் சில குறிப்பிட்ட பொருட்கள் மீதான GST வரி விலக்கப்பட்டுள்ளது. ஆபரேட்டர்கள் உடன் இணைக்கப்பட்ட சரக்கு வண்டிகளின் வாடகைக்கு வழங்கப்பட்டு வந்த GST வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கண்களுக்கான லென்ஸ், எலும்பு முறிவிற்கு பயன்படுத்த கூடிய சாதனங்கள், உடலில் பொருத்தப்படும் செயற்கை பாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீதான GST வரி குறைய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)