“இதற்காகவா உன்னை போன்ற நடிகரை உருவாக்க கஷ்டப்பட்டேன்...” - பாலச்சந்தரால் வாழ்க்கையை மாற்றிய ரஜினி!
"உன்னை போன்ற கலைஞனை பாதியில் இழப்பதற்காகவா அவ்வளவு சிரமப்பட்டு கொண்டு வந்தேன். நீ எவ்வளவு பணம் வேண்டுமோ வாங்கிக்கொள் , பெரிய பேனர் திரைப்படங்களில் மட்டுமே நடி என்றார்."
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் , இந்திய சினிமா தலைவா என கொண்டாடும் நடிகர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் பரட்டை என்னும் நெகட்டிவ் கதாபாத்திரம் மூலம் அறிமுகமானாலும் இன்று இவருக்கு இருக்கும் ஃபேன்ஸ் மூன்று டிகேட்ஸாக ஆளுமை செலுத்தி வருகிறது. ரஜினிகாந்த் இப்போது தொடந்து ரசிகர்களுக்காக நடித்துக்கொண்டிருக்கிறார். இன்னும் இரண்டு படங்களுக்கு பிறகு சினிமாவில் இருந்து ஓய்வெடுக்க போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் 30 வருடங்களுக்கு முன்னதாகவே சினிமாவிலிருந்து விலக முடிவெடுத்திருக்கிறார் ரஜினி. அது குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்
அதில் ” பணம் , பெயர், புகழ் இவருக்கு வந்துருச்சு அதனால இவர் இப்போ அரசியலுக்கு வரலாம்னு சொல்லுறாங்க சிலபேர். ஆனால் 20 வருடங்களுக்கு முன்பே எனக்கு பணம் , பெயர், புகழ் வந்துடுச்சு. அப்போதே எனக்கு சினிமே வேண்டாம் , போதும் நடித்தது என சொல்லிவிட்டு நான் நடிப்பதையே நிறுத்திவிட்டேன். எனக்கு தேவையான கார், பங்களா, பேங்க் பேலன்ஸ் எல்லாமே இருந்தது. மூன்று வேளை சாப்பாடு கிடைத்தது. இதற்கு மேல் வேண்டாம் என சொல்லிவிட்டு நான் நடிக்கவேயியில்லை. அப்போது என்னுடன் முரளி , முத்துராமன் சார் எல்லாம் இருந்தாங்க. நான்தான் யார் சொல்லியும் கேட்கவே மாட்டேனே. அப்போதுதான் பாலச்சந்தர் சார் வந்து கேட்டாங்க. எனக்கு விருப்பம் இல்லை. எல்லாம் போயிடுச்சு வேண்டாம். எனக்கு இந்த சினிமாக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்க விருப்பமில்லை அப்படினு சொன்னேன். உடனே பாலச்சந்தர் சார் சொன்னார், இதுவரையில் எந்த தயாரிப்பளர்களிடமெல்லாம் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறாயோ அதையெல்லாம் திருப்பி கொடு , இரண்டு மாதங்கள் முழுமையாக ஓய்வு எடு. என்றார். நானும் அப்படியே செய்தேன்.
அதன் பிறகு பாலச்சந்தர் சாரை சந்தித்தேன். அப்போது அவர் சொன்னார். நீ சினிமாவை விட வேண்டாம். உன்னை போன்ற கலைஞனை பாதியில் இழப்பதற்காகவா அவ்வளவு சிரமப்பட்டு கொண்டு வந்தேன். நீ எவ்வளவு பணம் வேண்டுமோ வாங்கிக்கொள் , பெரிய பேனர் திரைப்படங்களில் மட்டுமே நடி என்றார். அவரின் பேச்சை அப்படியே ஏற்றுக்கொண்டேன். அதன் பிறகு பெரிய பேனர் படங்களில் மட்டுமே நடித்தேன். அப்படி நடித்த படம்தான் அண்ணாமலை. அந்த படத்தின் இயக்குநர் இறுதி நேர படப்பிடிப்பை எடுக்க மாட்டேன் என சில காரணங்களால் கூறிவிட்டார். அதன் பிறகு சுரேஷ் கிருஷ்ணா நான் மீதி படத்தை எடுக்கிறேன் என்றார். அப்போது நான் வேண்டாம் சார் , நீங்க வந்தா உட்கார முடியாது, நிற்க முடியாது, தம் அடிக்க முடியாது என்றேன். அதன் பிறகுதான் பாலசந்தர் சார் அவர் எடுக்கட்டும். இனிமேல் நீ கதையில் டிஸ்கஷனில் உட்கார், பாடல் குறித்து கேள் என்றார். அதன் பிறகுதான் எல்லா படங்களிலும் கதை கேட்க தொடங்கினேன். பாலச்சந்தர் சார் எனக்கு தாய், தந்தையாக எப்படி இருந்தார் என்பதற்காகத்தான் இந்த நினைவுகளை பகிர்ந்தேன் “ என்றார் ரஜினி.