Sundara Travels Heroine: 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பும் சுந்தரா டிராவல்ஸ் ஹீரோயின்..!
சுந்தரா டிராவல்ஸ் பட நாயகி ராதா 15 வருடங்களுக்கு பிறகு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை ராதா 2002-ஆம் ஆண்டு சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு கேம், அடாவடி படங்களில் நடித்தார். 2008ஆம் ஆண்டு வெளியான காத்தவராயன் தான் இவரின் கடைசி திரைப்படம். அதன் பிறகு பைரவி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார் ராதா.
நடிகை ராதா:
தொழில் அதிபர் பைசல் 6 வருடம் தன்னுடன் வாழ்ந்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததாக இவர் புகார் அளித்திருந்தார். இதன் பிறகு ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை திருமணம் செய்த அவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணையின் போது அந்த எஸ் ஐ கதறி அழுததாக தகவல் வெளியானது. ஏற்கனவே திருமாணமாகி ஒரு குழந்தையுடன் தன் கணவரை விட்டு விலகிய ராதாவை தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக அவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது. ஒரு கட்டத்தில் சென்னையை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவரால் தங்களுக்குள் பிரச்சனை ஏற்ப்பட்டதாகவும் கூறி அந்த எஸ்.ஐ கதறி அழுததாக கூறப்படுகிறது.
மீண்டும் வெள்ளித்திரை:
ராதா தற்போது பாரதி கண்ணமா 2 சீரியலில் நடித்து வருகிறார். இவர் நடித்த படங்களிலேயே சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம். இந்த படத்தில் வடிவேலு-முரளி காம்போவில் வந்த காமெடி சீன்கள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் ராதாவின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது.
இதற்கிடையே தற்போது 15 வருடங்களுக்கு பிறகு நடிகை ராதா மீண்டும் வெள்ளி திரைக்கு திரும்புகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை டிரண்டிங் எண்டெர்டெயிண்மென்ட் மற்றும் வொயிட் ஹோர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கிறது. விதார்த், கலையரசன், திரிகுண், சந்தோஷ் ப்ரதாப், ஜான் விஜய், தேஜூ அஸ்வினி, அதுல்யா சந்திரா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இயக்குனர்கள் பி.வாசு உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த சகோ கணேசன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இசை அமைக்கிறார். மர்டர் மிஸ்டரி கலந்த கிரைம் திரில்லராக இப்படம் உருவாகிறது.
மேலும் படிக்க
Mayiladuthurai: 30 மாத ஊதியம் நிழுவை - தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்