மேலும் அறிய

Mayiladuthurai: 30 மாத ஊதியம் நிலுவை - தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மூடப்பட்ட சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வலியுறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் ஊதிய நிலுவைத் தொகை மற்றும் ஓய்வூதிய பணப்பயன்களை வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1987 -ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 700க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருந்தனர். 23 ஆயிரம் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த ஆலையானது, ஒரு டன்னுக்கு 97 கிலோ உற்பத்தி அரவை தந்தது. 1993 ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. 

Mayiladuthurai: 30 மாத ஊதியம் நிலுவை - தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் 1994 -ஆம் ஆண்டு 33 கோடி ரூபாயில் கூட்டுறவு சர்க்கரை ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் பணிகளை முறையாக செய்யவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், ஒரு டன்னுக்கு  59 கிலோ மட்டுமே சர்க்கரை அரவை தந்து நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில், நஷ்டத்தை சந்தித்து வந்த ஆலையை மறுசீரமைப்பு செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 2015 -ம் ஆண்டில் 56 கோடி ரூபாய் நிதி ஆலை புனரமைப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்தார். 

Rajinikanth In Thiruvannamalai : ’நிறைவேறிய நீண்ட நாள் ஆசை’ : திருவண்ணாமலை கோயிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்..வீடியோ..!

Mayiladuthurai: 30 மாத ஊதியம் நிலுவை - தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஆலையை புனரமைப்பதற்கான நிதியை தமிழக அரசு வழங்கவில்லை. தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் 2017 -ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. ஆலையில் வேலை செய்த ஊழியர்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது இந்த ஆலையில் பணிபுரியும் மீதமுள்ள தொழிலாளர்களுக்கு 30 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. மேலும், ஓய்வூதியர்களுக்கு பண பலன்கள் வழங்கப்படாமல் உள்ளது. இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சர்க்கரை ஆலையின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Dengue Fever: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல்? பள்ளி கல்லூரிகளில் கண்காணிப்பு தீவிரம்.. பொது சுகாதார துறை தரப்பில் கட்டுப்பாடுகள் என்ன?

Mayiladuthurai: 30 மாத ஊதியம் நிலுவை - தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆலை தொழிலாளர்களின் நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் வாரிசுதாரர்களின் பணப்பலன்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், மூடப்பட்ட சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வலியுறுத்தப்பட்டது. ஆலையின் சிஐடியு செயலாளர் ஜெயபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் மற்றும் ஆலை ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

இது பனை மரமா? இல்லை தூக்கணாங்குருவிகளின் நகரமா? கும்பகோணம் மக்களின் வியப்பு
இது பனை மரமா? இல்லை தூக்கணாங்குருவிகளின் நகரமா? கும்பகோணம் மக்களின் வியப்பு
பயணிகள் கவனத்திற்கு... நெல்லை - சென்னை சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
பயணிகள் கவனத்திற்கு... நெல்லை - சென்னை சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
சேதமான பாசன வாய்க்கால் படித்துறையால் சோகம்: உடன் சீரமைக்க ஆலக்குடி பொதுமக்கள் வலியுறுத்தல்
சேதமான பாசன வாய்க்கால் படித்துறையால் சோகம்: உடன் சீரமைக்க ஆலக்குடி பொதுமக்கள் வலியுறுத்தல்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை: கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை: கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
Embed widget