One 2 One: வெளியானது சுந்தர் சி நடித்த ஒன் டூ ஒன் படத்தின் சிங்கம் சிறுத்தை பாடல் லிரிக்ஸ் வீடியோ!
சுந்தர் சி மற்றும் அனுராக் கஷ்யப் நடித்துள்ள ஒன் டூ ஒன் படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது
சுந்தர் சி மற்றும் அனுராக் கஷ்யப் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒன் டூ ஒன் படத்திலிருந்து சிங்கமும் சிறுத்தையும் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ஒன் டூ ஒன்
தமிழ் சினிமாவின் பல வெற்றிப்படங்களை இயக்கிய சுந்தர்.சி கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை சுந்தர் சியிடம் உதவி இயக்குநராக இருந்த சுராஜ் இயக்கியிருந்தார். இதனிடையே 17 ஆண்டுகள் கழித்து தலைநகரம் படத்தின் 2ஆம் பாகம் உருவாகி கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது சுந்தர் சி நடித்துள்ள படம் ஒன் டூ ஒன்
இயக்குநர் திருஞானம் இயக்கத்தில் சுந்தர் சி அனுராக் கஷ்யப் நடித்துள்ள படம் One 2 One. சித்தார்த் விபிம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 24 Hours ப்ரோடக்ஷ்ன் நிறுவன இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தலைநகரம் 2 படத்திற்கு பிறகு சுந்தர் சி இப்படத்தில் நடிக்கிறார். இது சுந்தர் சி நடிப்பில் உருவாகும் இருபதாவது திரைப்படம். விஜய் வர்மன், நீது சந்திரா, ராகினி திவேதி மானஸ்வி ரியாஸ் கான் உள்ளிட்டவர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். எஸ்கே.ஏ பூபதி கார்த்திக், பிரவீம் நித்யானந்தம், விக்ரம் மோகன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கின்றனர். கடந்த ஆண்டு படப்பிடிப்பு முடிந்து அக்டோபர் மாதம் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கம் சிறுத்தை பாடல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி குரலில் லிரிக்கல் வீடியோ
Best of luck team … Unveiling the fierce and fiery #SingamSiruthai' from #One2One!Get ready to be swept away by its battle-ready beats🔥
— G.V.Prakash Kumar (@gvprakash) February 17, 2024
Kudos to the team for this adrenaline-pumping anthem💥🔥
Link- https://t.co/NcpkzAREyx
Produced by- @24hrsproductio4
Music By- @sidvipin…
த்ரிஷா நடிப்பில் வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை இயக்கியவர் திருஞானம். தற்போது தனது இரண்டாவது படமாக இப்படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் அனுராக் கஷ்யப் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக இமைக்கா நொடிகள், லியோ உள்ளிட்டப் படங்களில் இவர் நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதியிம் 50 ஆவது படமான மகாராஜா படத்திலும் முக்கிய வில்லனாக நடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இருவேறு குணங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் படமாக one to one படம் உருவாகி இருக்கிறது. தற்போது இந்த படத்தில் இருந்து சிங்கம் சிறுத்தை என்கிற லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ நடிகர் விஜய் சேதுபதியின் குரலில் அமைந்துள்ளது.