மேலும் அறிய
Advertisement
சுவாரஸ்யமான கதைக்களத்தில் கார்த்தியின் சுல்தான்.. U/A கொடுத்தது சென்சார் குழு..
கார்த்தி மற்றும் ராஷ்மிகா இணைத்து நடித்த ’சுல்தான்’ வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வெளிவர இருக்கிறது .
கார்த்தி மற்றும் ராஷ்மிகா இணைத்து நடித்த "சுல்தான்" வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வெளிவரவிருக்கிறது . Dream Warrior தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் சுல்தான். முதல்முறையாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் திரையுலகில் களமிறங்க, KGF சாப்டர் 1 படத்தில் கருடனாகத் தோன்றி அசத்திய நடிகர் ராமச்சந்திர ராஜு வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். தமிழில் இதுதான் அவருக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
100 சகோதரர்களை கொண்ட நாயகனுக்கும், அதற்கு நிகரான ஆள்பலம் கொண்ட வில்லனுக்கும் நடக்கும் சுவாரசியமான கதைக்களம் கொண்ட படமாக சுல்தான் வெளிவரவுள்ளது. வரவிருக்கும் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி சுல்தான் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு U/A கொடுத்துள்ளது தணிக்கை குழு .
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion