Suhasini : அப்பாவுக்கு இது மருத்துவ வெகேஷன்! மருத்துவமனையில் சாருஹாசன் - சுஹாசினி வெளியிட்ட பதிவு
Suhasini : நடிகர் கமல்ஹாசனின் அண்ணனும் சுஹாசினியின் தந்தையுமான நடிகர் சாருஹாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குணமடைந்து வருவதாக சுஹாசினி தகவல்.

உலகநாயகன் கமல்ஹாசனின் அண்ணனும், நடிகருமான சாருஹாசன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனை தன்னுடைய மகன் போல வளர்த்ததில் பெரும் பங்கு வகிப்பவர்கள் சாருஹாசன் மற்றும் அவரது மனைவி கோமளம் தான். அண்ணன் அண்ணி என்பதை தாண்டியும் அவர்களை அம்மா அப்பாவாகவே கருதி மரியாதை கொடுத்து அப்படியே அழைத்து வந்தார். இது குறித்து பல நேர்காணல்களில் தெரிவித்துள்ளனர்.
வழக்கறிஞராக இருந்த சாருஹாசன் சினிமாவில் நுழைந்த பிறகு நடிகராகவும், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமான சமயத்தில் இருந்து அவரின் கால்ஷீட் குறித்த அனைத்து விஷயங்களையும் இவரே கவனித்து வந்துள்ளார். அண்ணன் தம்பிக்கு இடையே 23 ஆண்டுகள் வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்பதில் இருந்து விலகிய சாருஹாசன் சமீபத்தில் மோகன் நடிப்பில் வெளியான 'ஹாரா' படத்தில் நடித்திருந்தார். தற்போது 93 வயதாகும் சாருஹாசன் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மகளும் நடிகையுமான சுஹாசினி, மருத்துவமனையில் இருக்கும் தன்னுடைய தந்தையை கட்டியணைத்த படி இருக்கும் புகைப்படம் ஒன்றை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"இதை என் தந்தையின் வெகேஷன் அல்லது மருத்துவ வெகேஷன் என்கிறீர்களா. மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மகள்களின் அன்புடனும் அக்கறையுடனும் அவர் நன்றாக குணமடைந்து வருகிறார்" என்ற குறிப்பையும் அந்த போஸ்டுடன் பகிர்ந்துள்ளார் சுஹாசினி.
View this post on Instagram
சுஹாசினியின் இந்த போஸ்டுக்கு பலரும் கமெண்ட் மூலம் அவரின் தந்தை விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்து கொள்கிறோம் என தெரிவித்து வருகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

