மேலும் அறிய

Karnan | ஸ்டேப்ளர் பின்னில் கர்ணன் பட போஸ்டர்: ரசிகர் சீவகவழுதியின் படைப்பும், குவியும் பாராட்டும்..!

நமக்கு வெறும் பாறையாகத் தெரிவது ஒரு சிற்பியின் பார்வையில் சிலையாகத்தான் தெரியும். தேவையற்ற கற்களை செதுக்கிவிட்டு அவன் சிற்பியைப் படைத்துவிடுவான். கலைஞர்கள் எல்லோருமே அப்படித்தான் தனித்துவமானவர்கள்.

முழுக்க முழுக்க ஸ்டேப்ளர் பின்னைக் கொண்டு தனுஷ் நடித்த கர்ணன் பட போஸ்டரை உருவாக்கி தயாரிப்பாளர் கலைப்புலி தானுவின் பாராட்டுதலைப் பெற்றுள்ளார் இளைஞர் ஒருவர்.

நமக்கு வெறும் பாறையாகத் தெரிவது ஒரு சிற்பியின் பார்வையில் சிலையாகத் தான் தெரியும். தேவையற்ற கற்களை செதுக்கிவிட்டு அவன் சிற்பியைப் படைத்துவிடுவான். கலைஞர்கள் எல்லோருமே அப்படித்தான் தனித்துவமானவர்கள். ஓவியக் கலைகளில் பல்வேறு விதங்கள் இருக்கின்றன. அதிலொன்று ஸ்டேபிள் ஆர்ட் எனப்படும் ஸ்ட்பேளர் பின்னால் ஓவியங்களை உருவாக்கும் கலை. அவ்வாறாக, முழுக்க முழுக்க ஸ்டேப்ளர் பின்னைக் கொண்டு தனுஷ் நடித்த கர்ணன் பட போஸ்டரை உருவாக்கி தயாரிப்பாளர் கலைப்புலி தானுவின் பாராட்டைப் பெற்றுள்ளார் இளைஞர் ஒருவர். கோவையைச் சேர்ந்த இவர், ஆணியில் கமல்ஹாசனையும், ஸ்டேப்ளர் பின்களால் கர்ணன் தனுஷையும் வரைந்து ’இண்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்’ இடம் பெற்றிருக்கிறார்.

சீவகவழுதி, கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் முதுகலை ஜர்னலிஸம் அண்ட் மாஸ்கம்யூனிகேஷன் படித்துள்ளார். கலை மீதான காதலால் இந்தப் படிப்பில் சேர்ந்துள்ளார். 6 ஆண்டுகளாக ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றியவர் அதனைத் துறந்து இதுபோன்ற புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம்.

கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பதால், அவர் ஓவியத்தை ஆணியால் வரைந்ததாகக் கூறுகிறார் சீவகவழுதி. இந்நிலையில், தற்போது தனுஷின் கர்ணன் பட போஸ்டரை ஸ்ட்பேளர் பின்னால் வரைந்துள்ளார். கர்ணன் தன் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் என்பதால் தனுஷுக்காக இந்த ஓவியத்தை வரைந்துள்ளேன் எனக் கூறியுள்ளார். இந்தப் புதிய முயற்சியை கர்ணன் பட இயக்குநர் மாரி செல்வராஜ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். தயாரிப்பாளர் கலைப்புலி தானு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதால் விரைவில் தனுஷின் கவனத்தையும் பெறுவேன் என சீவகவழுதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தனது பெயர்க்காரணம் குறித்து கூறுகையில், தனது தந்தை தமிழ் பற்றாளர் என்பதாலேயே இத்தகைய தூய தமிழ்ப் பெயரை தனக்குச் சூட்டியுள்ளதாகவும் அவர் கூறினார். அவர் பெயர் சீவக வழுதி. இதற்காக அவர் பத்து லட்சம் ஸ்டேப்ளர் பின்களைப் பயன்படுத்தியிருக்கிறார். அவர் உருவாக்கியுள்ள ஓவியம் தத்ரூபமாக, உயிரோவியமாகக் காட்சியளிக்கிறது.

இந்த ஓவியம் குறித்து பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு தனது ட்விட்டர் பக்கத்தில், "புதிய புதிய வரலாறுகளை கர்ணன் உருவாக்கிக் கொண்டிருக்கிறான், இன்னும் உருவாக்குவான், இப்படைப்பை வரைந்து சாதனை புரிந்த சீவக வழுதிக்கு எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார். கர்ணன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ளார். வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ். தானு தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்
Bhagyaraj Autobiography : மரணத்திற்கு முன் சுயசரிதையை வைரமுத்துவிடம் ஒப்படைத்துவிட்டு சென்ற பாக்யராஜ்!
Bhagyaraj Autobiography : மரணத்திற்கு முன் சுயசரிதையை வைரமுத்துவிடம் ஒப்படைத்துவிட்டு சென்ற பாக்யராஜ்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Maruti Victoris Discount: லட்சக்கணக்கில் தள்ளுபடி.! நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸுக்கு மாருதி செம ஆஃபர்
லட்சக்கணக்கில் தள்ளுபடி.! நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸுக்கு மாருதி செம ஆஃபர்
Embed widget