காதல் என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்துகிறார்கள்.. கொதித்த ரகுல் ப்ரீத் சிங்
காதல் என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆதங்கம் தெரிவித்துள்ளர்.

காதலில் பொய் சொல்வதையும், எமோஷனலாக பேசி ஏமற்றுவதையும் தன்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் காதல் என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் பேசியதாவது: “என்னைப் பொறுத்தவரை ஓர் உறவின் மிகப்பெரிய எதிரி பொய் சொல்வதுதான் என்று நினைக்கிறேன். நெருக்கமான உறவில் பேசமுடியாத விஷயம் என்று எதுவும் இல்லை. காதலை விடவும் காதலாக மாறுவதற்கு முன்பு நண்பர்களாக இருக்கும் அந்த உறவை நான் நம்புகிறேன். ஏனென்றால், அந்த உறவில் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதில் மறைப்பதற்கும் பொய் சொல்வதற்கும் எந்த தயக்கமுமிருக்காது. தவறு செய்தாலும் அதை மறைக்காமல் மனம் விட்டுப் பேசலாம்.
நாம் எல்லோரும் மனிதர்கள். தவறு செய்வது இயல்புதானே. ஆனால், காதலில் செய்த தவறை சொல்லாமல் மறைப்பதுதான் மிகப்பெரிய பிரச்சினை. காதலில் பொய் சொல்வதையும், எமோஷனலாக பேசி ஏமற்றுவதையும் என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று காதல் என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எதை எதையோ காதல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிலசமயம் ஒருவரை நேசிக்கும் ஒருநபர், அவர்கள் விரும்புவதை செய்ய அனுமதிக்காமல், தங்களுக்கு பிடித்ததை அவர்கள் மீது திணித்து அதைத்தான் நீ செய்ய வேண்டுமெனக் கட்டாயப்படுத்துகிறார்கள். அவர்களை வளரவிடாமல் தடுக்கிறார்கள். உங்களை மென்மேலும் வளரச் செய்வதுதான் உண்மையான காதலாக இருக்க முடியும் என்று நம்புகின்றேன்” இவ்வாறு ரகுல் ப்ரீத் சிங் பேசியுள்ளார்.
தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை காதலிப்பதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஏற்கனவே தகவல் வெளியிட்டு இருந்தார். 2021 -இல் தங்களது உறவை சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்திக் கொண்ட இந்த ஜோடிகள் அவ்வப்போது ஊர் சுற்றும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வருகிறது.
ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட்டில் பூமி பெட்னேகர் மற்றும் அர்ஜுன் கபூருடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடித்துவரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் அவர் இணைந்திருக்கிறார். மேலும் இந்தியில் இயக்குநர் நிகில் மகாஜன் இயக்கியுள்ள ‘ஐ லவ் யூ’ எனும் திரைப்படத்தில் இவர் நடித்தார். இத்திரைப்படம் ஜூன் 16 -ஆம் தேதி ஜியோ சினிமாவில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் படிக்க
PM Modi Dinner Menu: மோடிக்கு வெள்ளை மாளிகையில் தயாராகி உள்ள விருந்தில் என்னென்ன உணவுகள் தெரியுமா?





















