இரவு நேரத்தை அழகாக்கும் ஜி.வி.பிரகாஷ் ப்ளே லிஸ்ட் !
இரவு நேரத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் கேட்கக் கூடிய பாடல்கள் என்னென்ன?
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக மாறியவர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். இவர் 2010ஆம் ஆண்டு வெயில் திரைப்படத்தின் மூலம் தன்னுடைய இசையமைப்பாளர் பயணத்தை தொடங்கினார். அதன்பின்னர் பல படங்களுக்கு இசையமைத்தார். தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் இவரின் இசை சிறப்பான ஒன்றாக அமைந்தது. அதன்பின்னர் வெற்றிமாறன்,தனுஷ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் கூட்டணி பெரியளவில் ஹிட் அடித்தது. இப்படி பல படங்களுக்கு இசையமைப்பாளராக வலம் வந்துள்ளார். இவருடைய இசையில் அமைந்த சிறப்பான மெல்லிசை பாடல்கள் என்னென்ன?
1. உருகுதே மருகுதே:
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த முதல் படமான 'வெயில்' திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியிருப்பார். ஜி.வி.பிரகாஷின் இசை மற்றும் ஸ்ரேயாவின் குரல் பாடலுக்கு அதிக வலு சேர்த்திருக்கும்.
"தங்கம் உருகுதே
அங்கம் கரையுதே வெட்கம்
உடையுதே முத்தம் தொடருதே..."
2. அய்யோ அய்யோ:
தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். எஸ்பி பாலசுப்ரமணியம் மற்றும் அவருடைய மகன் எஸ்பிபி சரண் இணைந்து இப்பாடலை பாடியிருப்பார்கள். ஆனால் இதன் சிறப்பு அவர்கள் இருவரின் குரலையும் நம்மால் தனி தனியாக கண்டறிய முடியாத வகையில் இருக்கும். இதை அவ்வளவு அழகாக ஜி.வி.பிரகாஷ் செய்திருப்பார்.
"உன்ன பாா்த்த அந்த நிமிஷம்
மறைஞ்சி போச்சு நகரவே இல்ல
தின்ன சோறும் சொிக்கவே இல்ல
கொலம்புறேன் நானே.."
3. பிறை தேடும்:
மயக்கம் என்ன திரைப்படத்தில் இந்தப் பாடல் அமைந்திருக்கும். இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவருடைய மனைவி சைந்தவி பாடியிருப்பார்கள். இவர்கள் கூட்டணியில் அமைந்த சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று.
"நிழல் தேடிடும்
ஆண்மையும் நிஜம் தேடிடும்
பெண்மையும் ஒரு போா்வையில்
வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா..."
4. வாமா துரையம்மா:
மதராசப்பட்டினம் திரைப்படத்தில் இப்பாடல் அமைந்துள்ளது. இந்தப் பாடலை உதித் நாராயணன் பாடியிருப்பார். இந்தப் பாடலை காட்சிப்படுத்தி விதமும் சிறப்பாக இருக்கும். பாடலுக்கு நடுவே வரும் ஹனிஃபாவின் குரலும் நமக்கு சிரிப்பை உண்டாக்கும் வகையில் அமைந்திருக்கும்.
"வீர மன்னர்கள் வாழ்ந்த
நாடு இது எம்மா
இதை அடிமையாக்கித் தான்
கொடுமை செய்வது ஞாயமா
வலையில் மழையும் தான்
விழுந்தது எம்மம்மா..."
5. எள்ளு வய பூக்கலையே:
தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. யுகபாரதியின் வரியில் ஜி.வி.பிரகாஷ் இசையில் அவரது மனைவி சைந்தவி பாடியுள்ளார். இப்பாடல் பெரியளவில் ஹிட் அடித்த பாடலாக அமைந்தது. அதற்கு சைந்தவியின் குரலும் யுகபாரதியின் வரிகளும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
"காத்தோட உன் வாசம்
காடெல்லாம் ஒம் பாசம்
ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா
சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா
சாவையும் கூறு போட்டு கொல்லய்யா.."
இவை தவிர உன் பெயரை சொல்லும் போது, யார் இந்த சாலை ஓரம், பூக்கள் பூக்கும் தருணம் எனப் பல ஹிட் பாடல்களை ஜி.வி.பிரகாஷ் கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க: இரவு நேரத்தில் மயக்க வைக்கும் தளபதி விஜய் பாடல்கள் !