இரவு நேரத்தில் மயக்க வைக்கும் தளபதி விஜய் பாடல்கள் !
இரவு நேரத்தில் கேட்கக்கூடிய நடிகர் தளபதி விஜயின் சிறப்பான பாடல்கள் என்னென்ன?
![இரவு நேரத்தில் மயக்க வைக்கும் தளபதி விஜய் பாடல்கள் ! Some of the top Thalapathy vijay songs that can be heard in night இரவு நேரத்தில் மயக்க வைக்கும் தளபதி விஜய் பாடல்கள் !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/22/e7f51859fcf9fa63706041430dc10c29_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் திரையுலகில் தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் இன்று தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். நடிகர் விஜய் திரைப்படங்களில் அவரின் நடிப்பிற்கு சமமாக அவருடைய நடனம் அமைந்திருக்கும். அதேபோல் அவருடைய படங்களில் பல மெல்லிசை பாடல்களும் சிறப்பாக அமைந்திருக்கும். அப்படி விஜய் திரைப்படங்களில் அமைந்த சிறப்பான மெல்லிசை பாடல்கள் என்னென்ன?
1. ஆகாஷவாணி நீயே என் ராணி:
பிரியமுடன் என்ற திரைப்படத்தில் இப்பாடல் அமைந்திருக்கும். ஹரிஹரின் குரலில் தேவாவின் இசையில் இப்பாடல் அமைந்திருக்கும். இரவு நேரத்தில் கேட்கும் வகையில் இப்பாடல் மற்றும் அதன் வரிகள் இடம்பெற்று இருக்கும்.
"நிலா நிலா என் கூடவா
சலாம் சலாம் நான் போடவா
சதா சதா உன் ஞாபகம்
சுகம் சுகம் என் நெஞ்சிலே...."
2. என்னவளே என்னவளே:
நினைத்தேன் வந்தாய் என்ற திரைப்படத்தில் இப்பாடல் அமைந்திருக்கும். இப்பாடலை அனுராதா ஶ்ரீராம் மற்றும் மனோ பாடியிருப்பார்கள். இசையமைப்பாளர் தேவாவின் இசையில் இந்தப் பாடல் கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கும்.
"உயிரில் பூப்பறித்த காதலியும் நீதான்
உள்ளம் தேடுமொரு தேதையும் நீதான்
இரவில் மிதந்து வரும் மெல்லிசையும் நீதான்
இளமை நனையவரும் பூமழையும் நீதான்
விசிரி விட்டாய் நீதான் நீதான்...."
முடியுமே மீண்டும் வந்து
சேர்ந்தால் மறு பிறவி தொடருமே
நீயும் கோவில்
ஆனால் சிலையின்
வடிவில் வருகிறேன்
நீயும் தீபம் ஆனால்
ஒளியும் நானே ஆகிறேன்..."
4. இன்னிசை பாடி வரும்:
துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருப்பார். பாடகர் உன்னிகிருஷ்ணனின் குரலுடன் இந்தப் பாடலின் வரிகளும் சிறப்பாக இருக்கும்.
"தேடல் உள்ள
உயிா்களுக்கே தினமும்
பசியிருக்கும் தேடல் என்பது
உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே..."
5. என்னை தாலாட்ட வருவாளா:
காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் அமைந்த சிறப்பான பாடல் இது. இளையராஜா-விஜய் கூட்டணியில் அமைந்த ஹிட் பாடல் இது. இதை ஹரிஹரன் மற்றும் பவதாரணி பாடியிருப்பார்கள். இளையராஜாவின் இசை மற்றும் பாடலின் வரிகள் கேட்கும் போது அவ்வளவு அழகாக இருக்கும்.
"தத்தளிக்கும் மனமே
தத்தை வருவாளா மொட்டு
இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி
கேட்கிறதே.."
இவை தவிர நீதானே, சர்க்கரை நிலவே போன்ற பல சிறப்பான விஜய் பாடல்கள் இரவு நேரத்தில் கேட்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ”செந்தமிழ் நாட்டு தமிழச்சியே “ - ரஷ்ய சாலையில் சேலையில் வலம் வரும் டாப்ஸி!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)