மனதை கரைய வைக்கும் பிரதீப் குமாரின் ப்ளேலிஸ்ட் !
இரவு நேரத்தை அழகாக அமைக்கும் பாடகர் பிரதீப் குமாரின் பாடல்கள் என்னென்ன?
தமிழ் திரையுலகில் தற்போது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வரும் பாடகர் என்றால் அது பிரதீப் குமாரதான். திருச்சியில் பிறந்த பிரதீப் குமார் முதலில் கர்நாடக இசையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். பின்னர் சினிமா இசையிலும் பாடல்கள் பாட தொடங்கி பலரின் மனதை மயங்க வைத்தார். இவருடைய குரல் கேட்பவர்களுக்கு ஒரு புது உணர்வை தரும் வகையில் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட இவரின் குரலில் அமைந்த சில டாப் பாடல்கள் என்னென்ன?
1. மறந்தாயே மறந்தாயே:
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் தளத்தில் வெளியான திரைப்படம் டெடி. இந்தத் திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை பிரதீப் குமார் மற்றும் ஜோனிட்டா காந்தி ஆகியோர் பாடியிருப்பார்கள்.
"நினைவுகள் யாவும் நீங்கி போனால்
நான் யார் மறதியா அவதியா சகதியா
நிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால்
நீ யார் ஜனனமா சலனமா மரணமா"
2. கோடி அருவி கொட்டுதே:
மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இப்பாடலை பிரதீப் குமார் மற்றும் நித்யஶ்ரீ சிறப்பாக பாடியிருப்பார்கள். பாடலின் இசை மற்றும் அவர்களின் குரல் நம்மை மிகவும் ஆனந்தம் அடையச்செய்யும்.
"கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே…."
3. மயிலாஞ்சி:
டி இமான்- பிரதீப் குமார் கூட்டணியில் அமைந்த மற்றொரு சிறப்பான பாடல் இது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இதை பிரதீப் குமார் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் சிறப்பாக பாடியிருப்பார்கள்.
"கண்ணால நீயும்
நூல விட்டு பாக்க
காத்தாடியாக
நானும் சுத்துறேன்
சதா சதா
சந்தோஷமாகுறேன்
மனோகரா உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்.."
4. கண்ணம்மா:
காலா திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் பிரதீப் குமார், தீ மற்றும் அனந்து ஆகியோர் பாடியிருப்பார்கள். பிரதீப் குமார்-சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் அமைந்த சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று. இப்பாடல் வரிகளும் சிறப்பாக அமைந்திருக்கும்.
"மீட்டாத வீணை
தருகின்ற ராகம் கேட்காது
பூங்காந்தலே …. ஊட்டாத
தாயின் கணக்கின்ற பால்
போல் என் காதல்
கிடக்கின்றதே"
5. ஆகாயம் தீ பிடிச்சா:
மெட்ராஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் பிரதீப் குமாரை தமிழ் திரையுலகிற்கு அடையாளம் காட்டிய சிறப்பான பாடல் என்று கூறலாம். சந்தோஷ் நாராயணன்- பிரதீப் குமார் கூட்டணியில் அமைந்த சிறந்த பாடல் என்று இதை குறிப்பிடலாம். மேலும் பாடலின் வரிகளும் அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கும்.
"காதலுக்கு கண்கள்
இல்லை கால்கள் உண்டு
தானே சொல்லாமலே ஓடி
போனாலே வேடந்தாங்கல்
பறவைக்கெல்லாம் வேறு
வேறு நாடு உன்னுடையே
கூடு நானடி அண்ணாந்து
பாா்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி... "
இவை தவிர மாய நதி, ஆசை ஓர் புல்வெளி, ஆகாசத்த நான் பாக்குறேன் போன்ற பல சிறப்பான பாடல்களை பிரதீப் குமார் பாடியுள்ளார்.
மேலும் படிக்க: இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !