இரவோடு உறவாட வரும் கங்கை அமரனின் வரிகளில் தீரும் நம் வலிகள்!
இரவு நேரத்தில் கேட்கக் கூடிய கங்கை அமரன் எழுதிய பாடல்கள் என்னென்ன?
தமிழ் சினிமாவில் இயக்குநர், எழுத்தாளர், பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர் போன்ற பன் முகங்களை கொண்டவர் கங்கை அமரன். இவரின் சகோதரர்கள் அனைவரும் இசையில் இருந்ததால் இவருக்கு இசையமைத்து இயல்பாகவே வந்தது. அத்துடன் இவருக்கு பாடல் எழுதுவதும் சிறப்பாக வந்தது. பல திரைப்படங்களை இயக்கி உள்ள கங்கை அமரன் அதில் சில பாடல்களையும் எழுதியுள்ளார். அவ்வாறு அவர் எழுதிய பாடல்களில் சிறந்த பாடல்கள் என்னென்ன?
1. செந்தூர பூவே:
கமல்ஹாசன்,ரஜினிகாந்த், ஶ்ரீதேவி நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 16 வயதினிலே. இந்தத் திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. இளையராஜாவின் இசை மற்றும் ஜானகியின் குரல் சிறப்பாக அமைந்திருக்கும். இதற்கு கங்கை அமரனின் வரிகள் மேலும் வலு சேர்த்து இருக்கும்.
"மாலை வரும்
அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும்
பூவை இறைத்திடுங்கள்..."
2. பூவரசம் பூ பூத்தாச்சு:
ராதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் கிழக்கே போகும் ரயில். இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இதற்கு இளையராஜா இசையமைத்திருப்பார். பாடகி ஜானகி இப்பாடலை பாடியிருப்பார். இந்தப் பாடலுக்கும் கங்கை அமரன் வரிகளை எழுதியிருப்பார்.
"நடப்பதோ மார்கழி மாசம்…..
தையிலே நிச்சயதார்த்தம்
நாதசுரம்……மேளம் வரும்
நெதமும் நெல்லைச் சோறாக்கி
நெத்திலி மீனைக் குழம்பாக்கி
மச்சான் வந்தா ஆக்கிக் கொடுப்பேன்...."
3. ஆசையை காத்துல:
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜானி. இந்தப் படத்தில் இப்பாடல் இடம்பெற்று இருக்கும். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பார். இளையராஜாவின் இசை மற்றும் கங்கை அமரின் வரிகள் சிறப்பாக அமைந்திருக்கும்.
"நேசத்துல வந்த
வாசத்துல நெஞ்சம் பாடுது
ஜோடிய தேடுது பிஞ்சும்
வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடைய போடுது
பார்வையில் சொந்தம் தேடுது
மேடையில..."
4.கொடைக் கால காற்றே:
பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கும் இளையராஜா இசையமைத்திருப்பார். இப்பாடலின் வரிகளும் சிறப்பாக அமைந்திருக்கும்.
"வானில் போகும் மேகம் இங்கே
யாரைத் தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம்
யாரைப் பாடுதோ
தன் உணர்வுகளை மெல்லிசையாக
நம் உறவுகளை வந்து கூடாதோ..."
5. ஜல்சா பண்ணுங்க:
வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் கங்கை அமரன் பாடல் வரிகள் எழுதியிருப்பார். இந்தப் படத்தில் இந்தப் பாடல் நல்ல ஹிட் அடித்தது.
"ஞாபகம் வந்ததடா
அந்த நாள் ஞாபகம் வந்ததடா
நண்பனை விட ஒருத்தன்
லைஃப்வுக்கு தேவை இல்லையடா
நட்புக்கு கூட கற்புகள் உண்டு
நல்லா தெரிஞ்சுக்கடா
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா
வெற்றிகள் குமியுமடா
நம் வெற்றிகள் குமியுமடா..."
இவை தவிர மண்ணில் இந்த காதலன்றி, கோடான கோடி உள்ளிட்ட பல பாடல்களை கங்கை அமரன் எழுதியுள்ளார். அவை அனைத்தும் மெகா ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: இரவை இவளிடம் கொடுங்கள்... இசையால் நம்மை நிரப்புவாள்... ‛இது ஹரினி ஹிட்ஸ்’