மேலும் அறிய

Sobhan Babu birthday | ‛சட்டம் படிக்க வந்து சூப்பர் ஸ்டாரான சோபன் பாபு’ பிறந்தநாளில் ஒரு குட்டி ஸ்டோரி!

காதல் காட்சிகளை இளசுகளை கொள்ளைக்கொண்ட சோபன் பாபு , குடும்ப படங்களில் நடித்து அக்காலத்து பெண்களின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார்.

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகராக அறியப்படுபவர் நடிகர் சோபன் பாபு. சோபன் பாபு என்றதுமே நமது நினைவுக்கு வருவது ஜெயலலிதாதான். சரி ! இவர்கள் உறவு குறித்து பார்ப்பதற்கு முன்னால் , சோபன் பாபுவின் சினிமா பயணத்தை சற்று ரீக்கேப் செய்து விடுவோம்.

கடந்த 1937 ஆம் ஆண்டும் ஜனவரி மாதம் உப்பு ஷோபனா சலபதிராவாக பிறந்தவர்.  இவரது தந்தையின் பெயர் உப்பு சூர்யநாராயண ராவ். ஒரு எளிய விவசாய குடும்பம்தான். சோபன் பாபுவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சின்ன நந்திகம என்னும் கிராமம். மயிலாவரம் மேல்நிலைப் பள்ளியில் தனது ஆரம்ப கல்வியை பயின்ற சோபன் பாபு , விஜய்வாடாவில் உள்ள கல்லூரி ஒன்றில் தனது பட்டப்படிப்பை பயின்றார். பள்ளி பருவத்திலேயே மேடை நாடகங்களில் அசத்தி வந்த சோபன் பாபுவிற்கு சிறுவயதிலேயே சினிமா என்றால் அவ்வளவு பிடிக்குமாம்.  கீழக்கூர்ரம் என்னும் திரைப்படம்தான் சோபன் பாபு பார்த்த திரைப்படமாம். பாதாள பைரவி, மல்லீஸ்வரி, தேவதாசு ஆகிய தெலுங்கு படங்கள் இன்றளவு  மனதை விட்டு அகலாத படங்கள் என்றும் அட்ர்ஹில் மல்லீஸ்வரி திரைப்படத்தை 22 முறை திரையரங்கிற்கு சென்று பார்த்ததாகவும் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

Sobhan Babu  birthday | ‛சட்டம் படிக்க வந்து சூப்பர் ஸ்டாரான சோபன் பாபு’ பிறந்தநாளில் ஒரு குட்டி ஸ்டோரி!

பட்டப்படிப்பு முடித்த சோபன் பாபு மேற்கொண்டு சட்டம் பயில சென்னைக்கு வந்திருக்கிறார். என்னதான் சட்டப்படிப்பின் மீதான ஆசை ஒரு பக்கம் இருந்தாலும் சினிமா மீதான மோகம் விடவில்லை. காலை கல்லூரிக்கு செல்வது , மாலையில் சினிமா ஸ்டூடியோக்களில் வாய்ப்பிற்காக ஏறி இறங்குவதுமாக இருந்திருக்கிறார் சோபன் பாபு. 1959 ஆம் ஆண்டு முதன் முதலில் என்.டி.ராமாரவ் உடன் நடித்த சோபன் பாபு அடுத்தடுத்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.தன்னை நம்பி மனைவி , குழந்தை இருப்பதால் அவர்களின் தேவைக்காகவே சோபன் பாபு தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.  ஆம், கடந்த மே 15, 1958 இல் காந்த குமாரி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகுதான் தனது திரையுல பயணத்தை சோபன் பாபு தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  நிறைய படங்களில் நடித்த சோபன் பாபுவிற்கு நர்த்தனசாலாவில் அபிமன்யுவாகவும், பீஷ்மரில் அர்ஜுனனாகவும், சீதாராமகல்யாணத்தில் லட்சுமணனாகவும், புத்திமந்துடுவில் கிருஷ்ணனாகவும் நடித்த கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. நந்தமுரி தாரகா ராமராவ் மற்றும் அக்கினேனி நாகேஸ்வர ராவ் என அந்த காலக்கட்டத்தில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்த நடிகர்கள் சோபன் பாபுவை ஆதரித்தாகவும் , அவருக்கு சினிமா வாய்ப்புகளை பெற்றுத்தந்ததாகவும் பின்நாட்களில் சோபன் பாபுவே தெரிவித்துள்ளார்.

Sobhan Babu  birthday | ‛சட்டம் படிக்க வந்து சூப்பர் ஸ்டாரான சோபன் பாபு’ பிறந்தநாளில் ஒரு குட்டி ஸ்டோரி!
1965 ஆம் ஆண்டு வெளியான வீர அபிமன்யு திரைப்படத்திற்கு பிறகு சோபன் பாபு ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார் . அதன் பிறகு நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த சோபன் பாபு , தெலுங்கு சினிமாவின் அசைக்க முடியாத நட்சத்திரமாக உருவெடுத்தார். காதல் காட்சிகளை இளசுகளை கொள்ளைக்கொண்ட சோபன் பாபு , குடும்ப படங்களில் நடித்து அக்காலத்து பெண்களின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார். சோபன் பாபுவின் அதிரடி சண்டைக்காட்சிகளை காண வேண்டும் என்பதற்காகவே திரையரங்குகிற்கு விரைந்தவர்களும் உண்டு . ஆனாலும் ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் சோபன் பாபுவிற்கு அதிகமாம். இவருடன் பல முன்னணி நடிகைகள் ஜோடியாக நடித்து வந்த நிலையில் , கோலிவுட்டில் டாப் நடிகையாக இருந்த ஜெயலலிதாவும் அவ்வப்போது சோபன் பாபுவுடன் நடித்து வந்திருக்கிறார். 

Sobhan Babu  birthday | ‛சட்டம் படிக்க வந்து சூப்பர் ஸ்டாரான சோபன் பாபு’ பிறந்தநாளில் ஒரு குட்டி ஸ்டோரி!

எம்.ஜி.ஆருடன் கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்தார் ஜெயலலிதா. அந்த காலக்கட்டத்தில்தான் சோபன் பாபு, ஜெயலலிதா நட்பு குறித்து பரவலாக பேசப்பட்டது. 1975 ஆம் காலக்கட்டத்தின் சினிமாவில் இருந்து விலக போவதாக அறிவித்தார் ஜெயலலிதா. அப்போது ஜெயலலிதா சோபன் பாபுவை திருமணம் செய்துவிட்டதாக பத்திரிக்கைகள் எழுத தொடங்கின. சோபன் பாபுவுக்கு திருமணமாகி ஏற்கனவே இரண்டு மகன்களும் , மகள்களும் உள்ள நிலையில் , இதனை சோபன் பாபு எப்படி கையாளுவதென்றே தெரியாமல் திகைத்தார். ஆனால் ஜெயலலிதா துணிவாக பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் சோபன் பாபுவுக்கு எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது உண்மைதான். இதற்கு நாங்கள் இருவருமே பொறுப்பேற்க முடியாது.  அவரது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு என்னை திருமணம் செய்துக்கொள்ள சிலர் அறிவுரை கூறுகிறார்கள் , ஆனால் ஒன்றுமே அறியாத அவர் மனைவியை விட்டுவிட்டு என்னை திருமணம் செய்துக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை” என பகிரங்கமாக பேசியிருந்தார். 

Sobhan Babu  birthday | ‛சட்டம் படிக்க வந்து சூப்பர் ஸ்டாரான சோபன் பாபு’ பிறந்தநாளில் ஒரு குட்டி ஸ்டோரி!

இதனால் சோபன் பாபு மற்றும் ஜெயலலிதா உறவில் விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. என்னதான் ஜெயலலிதா சோபன் பாபு குறித்து இப்படியாக பேசியிருந்தாலும் , எம்.ஜி.ஆரை சீண்டுவதற்காகத்தான் ஜெயலலிதா , சோபன் பாபுவுடன் நெருங்கி பழகியதாகவும் , கணவன் - மனைவி போல் வாழ்கிறார்கள் என உலகம் அறியட்டும் என சொந்த புகைப்படக்காரரை வைத்து புகைப்படம் எடுத்தாகவும் கூறப்படுகிறது. அது எப்படியோ அதன் பிறகு சோபன் பாபு தனது கடைசி சினிமா பயணம் வரையில் ஹீரோவாகவே நடித்து வந்தார். அதன் பிறகு கௌரவ தோற்றம், குணச்சித்திர நடிகர் என எந்த படத்திலும் சோபன் பாபு தோன்றவில்லை. பிரபல நடிகராக இருந்தாலும்  அவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில்  காணக்கிடைப்பதில்லை. 1996ல் வெளிவந்த ஹலோ படத்திற்குப் பிறகு, குரு படத்தின் மூலம் தனது 30 ஆண்டுகால நடிப்பை முடித்துக் கொண்டு சென்னையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழித்தார். கடந்த மார்ச் 20, 2008 அன்று காலை  நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோபன் பாபு , சிகிச்சை பலனின்றி 10:50 மணிக்கு உயிரிழந்தார்.

Sobhan Babu  birthday | ‛சட்டம் படிக்க வந்து சூப்பர் ஸ்டாரான சோபன் பாபு’ பிறந்தநாளில் ஒரு குட்டி ஸ்டோரி!
சோபன் பாபு தன் வாழ்நாளில் பல விருதுகளை வாங்கி குவித்தார். அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக  நான்கு பிலிம்பேர் விருதுகள், சிறந்த நடிகருக்கான ஐந்து  நந்தி விருதுகள் , எட்டு சினிகோயர்ஸ் விருதுகள் , மூன்று  வம்சி பெர்க்லி விருதுகள் மத்திய அரசின் சிறந்த நடிகருக்கான விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவர் ஆந்திரா என்றாலும், தமிழக அரசியல் என வரும் போது, சோபன் பாபு பெயர் வராமல் கடக்காது. இன்று அவரது பிறந்தநாள். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
Poisonous Gas: உலகின் மிகவும் ஆபத்தான விஷவாயு..! முதல் மூச்சுக்கே உயிர் இருக்காது, காரணம் என்ன?
Poisonous Gas: உலகின் மிகவும் ஆபத்தான விஷவாயு..! முதல் மூச்சுக்கே உயிர் இருக்காது, காரணம் என்ன?
Embed widget