SK 25 Update : தீ பரவட்டும்...சிவகார்த்திகேயன் 25 ஆவது படத்தின் மாஸ் அப்டேட்
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே 25 படத்தின் டைட்டில் டீசர் அப்டேட் வெளியாகியுள்ளது.

எஸ்.கே 25
அமரப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் மீது ரசிகர்களுக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அந்த வகையில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் எஸ்.கே 25 படம் தான் தற்போது ட்ரெண்டிங் டாபிக் ஆக இருக்கிறது.
சுதா கொங்காரா இயக்க சிவகார்த்திகேயன் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். ரவி மோகன் , அதர்வா , ஸ்ரீலீலா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். டாவ்ன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டின் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்தின் டைட்டில் டீசர் அப்டேட் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
The revolution waits for no one ✊
— DawnPictures (@DawnPicturesOff) January 28, 2025
Tomorrow marks the beginning🔥
Catch the #SK25 Announcement teaser tomorrow at ⏰ 4:00 PM#VivaLaRevolución
🎬 The revolution is yours to witness
Stream it on 🔗 https://t.co/dRQ2AXcho0@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan… pic.twitter.com/lHxAY8m34u
சூர்யாவை நாயகனாக வைத்து சுதா கொங்காரா இயக்கவிருந்த படம் புற்நாநூறு. இந்தி எதிர்ப்பு போராட்டை மையமாக வைத்து பீரியட் டிராமாவாக இப்படம் உருவாக இருந்தது. நஸ்ரியா , துல்கர் சல்மான் என பெருக் நட்சத்திரங்கள் படத்தில் நடிக்க இருந்தார்கள். ஆனால் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து சூர்யா விலக அடுத்தடுத்து மற்ற நடிகர்களும் விலகினர். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் இப்படத்தில் இணைந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

