‛அனிருத் இல்லாத சிவா பாடல் எப்போதுமே...’ ஜெஸிக்கா பாடலுக்கு குவியும் நெகடீவ் விமர்சனங்கள்!
கலவை விமர்சனங்களை பெற்று வரும் ப்ரின்ஸ் படத்தின் இரண்டாவது சிங்கிள்
டாக்டர், டான் என ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களுக்கு பிறகு, பிரின்ஸ், மாவீரன் மற்றும் அயலான் ஆகிய மூன்று படங்களை தன் லைன் அப்பில் வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
பிரின்ஸ் படத்தின் நேற்று வெளியாவதாக தகவல் வந்தது. சொன்னபடி இரண்டாவது சிங்கிள் வெளியானது. முதலில், மாலை 5:30 மணிக்கு வெளியாகும் என்று சொன்னார்கள். பின் 7 மணிக்கு தள்ளிப்போட்டார்கள். இறுதியில் 8 மணிக்கு பாடல் வெளியானதால் மக்கள் டென்ஷன் ஆகிவிட்டனர்.
View this post on Instagram
இப்படத்தில், வெளிநாட்டு பெண் ஒருவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பாடல் ஆரம்பித்தவுடன், நாளு இங்கிலீஷ் வரிகளில் ஆரம்பித்தது. பின் ஜெஸிக்கா ஜெஸிக்கா என்று மாறி மாறி பாடியுள்ளனர். இப்பாடல் கேட்க ப்ரெஷான மெட்டாக அமைந்து இருக்கிறது. சிவகார்த்திகேயனின் டான்ஸ் அசைவுகள் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. கோலிவுட்டில் சிறப்பாக நடனமாட கூடியவர்களில் இவர் ஒருவர் என்றும் கருத்துக்கள் தீயாய் பறந்து வருகிறது.
#Prince #Jessica vibe😅😅😅 https://t.co/UHBTOzITil pic.twitter.com/CWnYNsdhjo
— Varun (@AmVarunD) September 24, 2022
கேட்க இப்பாடல் நன்றாக இருந்தாலும், அனிரூத்-சிவா காம்போ மீஸ் ஆனதால் இப்பாடல் கேட்க நன்றாக இல்லை என்ற நெகடீவ் விமர்சனங்களும் இணையத்தில் சூழ்ந்து இருக்கிறது.
முன்னதாக, ப்ரின்ஸ் படத்தின் முதல் பாடல் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பிம்பிலிக்கி பிலாக்கி என தொடங்கும் அந்த பாடலை விவேக் எழுதியிருந்தார். இசையமைப்பாளர் அனிருத், ரம்யா பெஹாரா, சாஹிதி சாகந்தி ஆகியோர் இப்பாடலை பாடியிருந்தனர். இதுதொடர்பான பாடல் வரிகள் அடங்கிய வீடியோவில் சிவகார்த்திகேயனின் டான்ஸ் அனைவரையும் கவர்ந்தது.
ப்ரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும், இதன் படப்பிடிப்பு தமிழ்நாடு, ஹைதராபாத் மற்றும் பாண்டிச்சேரி, லண்டன் போன்ற இடங்களில் நடைபெற்றது என்றும் முன்னதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. இப்படமானது வரும் தீபாவளி அதாவது, அக்டோபர் 24 அன்று வெளியாகிறது.