மேலும் அறிய

Sivaangi Lover: பர்த்டே ஸ்பெஷலாக காதலரை அறிமுகப்படுத்திய சிவாங்கி... லைவில் சொன்னது உண்மையா...? ரசிகர்கள் உற்சாகம் !

பிறந்தநாளுக்கு ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் தனது காதலர் குறித்து பேசிய சிவாங்கி.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. இசை குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் - பின்னி கிருஷ்ணகுமார் மூத்த மகளான சிவாங்கிக்கு ரத்தத்திலேயே இசை ஊறிப்போன ஒன்று. தனது பாடும் திறமையால் சுட்டித்தனமான சுபாவம் கொண்ட சிவாங்கி பலரின் ஃபேவரட் போட்டியாளராக இருந்து வந்தார். சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாக என்ட்ரி கொடுத்தார். அவரின் அசட்டுத்தனமான குழந்தைத்தனம் குறும்பை ரசிக்க துவங்கிய ரசிகர்கள் சிவாங்கியை தனது வீட்டு பெண்ணை போலவே எண்ண துவங்கினர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ரீச் எந்த அளவிற்கு இருந்ததோ அதே போல சிவாங்கியின் வளர்ச்சியும் அதிவேகமாக எகிறியது.  

Sivaangi Lover: பர்த்டே ஸ்பெஷலாக காதலரை அறிமுகப்படுத்திய சிவாங்கி... லைவில் சொன்னது உண்மையா...? ரசிகர்கள் உற்சாகம் !
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்புகளும் குவிந்தது. நடிப்பு மட்டுமின்றி பாடகியாகவும் பல மெலடி பாடல்களை பாடி பின்னணி பாடகியானார். சமீப காலமாக ராப் ஸ்டைல் பாடல்களையும் பாடி தான் ஒரு வெர்சடைல் சிங்கர் என்பதை நிரூபித்து வருகிறார். 

லைவில் வந்த சிவாங்கி : 

இந்த நிலையில் சிவாங்கியின் 23வது பிறந்தநாளை மே 25ம் தேதி கொண்டாடினார். பிறந்தநாள் ஸ்பெஷலாக ரசிகர்களின் கேள்விக்கு லைவில் பதிலளித்து வந்தார். இந்த லைவில் ஆர்.ஜே. ரக்ஷன் மற்றும் நடிகர் தர்ஷன் இணைந்தனர். இவர்களோடு ஒரு சில குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோமாளிகளும் கலந்து கொண்டனர். ரசிகர்கள் சிவாங்கி தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் வர வேண்டும் என கேட்டு கொள்ள அதற்கு சிவாங்கி நான் இந்த சீசனில் குக்காக வந்ததால் அடுத்தடுத்த சீசன்களில் பங்கேற்க முடியாது என கூறினார். அதற்கு ரசிகர்கள் நீங்கள் கோமாளியாகவாவது வரவேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். ரசிகர்களின் கேள்விக்கு மிகவும் ஜாலியாக பதிலளித்து வந்த சிவாங்கியிடம், தர்ஷன் ஒரு ஸ்வாரஸ்யமான கேள்வியை கேட்டார். உன்னுடைய இந்த பிறந்தநாளில் நீ உன்னுடைய காதலரை சந்திக்க எனது வாழ்த்துக்கள். மேலும் அவர் யார் என்பதையும் நீ சொல்ல வேண்டுமென்றும் ஷாக் கொடுத்தார். 

Sivaangi Lover: பர்த்டே ஸ்பெஷலாக காதலரை அறிமுகப்படுத்திய சிவாங்கி... லைவில் சொன்னது உண்மையா...? ரசிகர்கள் உற்சாகம் !

யார் சிவாங்கியின் காதலர் :

சிவாங்கியின் பதில் என்னவாக இருக்கும் என ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு மழுப்பலாக சிவாங்கி யாரை சொல்வது என எனக்கு தெரியவில்லை. நான் இன்னும் அவரை பார்க்கவேயில்லை. அவரைத்தான் தேடி கொண்டு இருக்கிறேன். இந்த வருடமாவது நான் அவரை சந்திப்பேன் என நினைக்கிறேன் என விளையாட்டாக பதிலளித்தார். 

ஏற்கனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சமயத்தில் இருந்தே சக போட்டியாளர் சாம் விஷாலுடன் இணைந்து பேசப்பட்டு வந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த பிறகு சீசன் 2 போட்டியாளராக இருந்த அஸ்வின் மீது சிவாங்கிக்கு ஒரு க்ரஷ் இருந்தது. அவர்கள் இருவரும் ட்ரெண்டிங் கப்பில் என விருந்தும் வழங்கப்பட்டது. அவர்கள் இருவருக்கு இடையே காதல் என வதந்திகள் பரவின. ஆனால் அதற்கு அஸ்வின் தெளிவாக இருவருக்கு இடையில் எதுவும் இல்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். தற்போது மீண்டும் சிவாங்கியின் காதலர் பற்றின கேள்விகள் எழுந்துள்ளது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. சிவாங்கியின் லைவ் வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Modi Wishes for Thaipusam: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”Illaiyaraja Deva Controversy | “நான் காசு வெறி புடிச்சவனா” இளையராஜா மீது தேவா ATTACK அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Modi Wishes for Thaipusam: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
Embed widget