மேலும் அறிய

Siragadikka Aasai : முத்துவை வாழ்த்தி பேசும் தருணம்... யார், என்ன சொன்னாங்க தெரியுமா? சிறகடிக்க ஆசை அப்டேட்

Siragadikka Aasai : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

'சிறகடிக்க ஆசை' (Siragadikka Aasai) சீரியல் இன்றைய (மே 20) எபிசோடில் மீனா முத்து திருமண நாள் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஸ்ருதியும் ரவியும் சேர்ந்து மீனா முத்துவுக்கு பரிசு ஒன்று கொடுக்கிறார்கள். இரண்டாவது முறையாக மீனா முத்து கோயிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை பரிசாக கொடுத்ததை பார்த்து சந்தோஷப்படுகிறார்கள்.

Siragadikka Aasai : முத்துவை வாழ்த்தி பேசும் தருணம்... யார், என்ன சொன்னாங்க தெரியுமா? சிறகடிக்க ஆசை அப்டேட்

மீனா முத்துவின் இந்த முதல் ஆண்டு திருமண வாழ்க்கை குறித்து அனைவரும் என்ன நினைக்கிறார்கள் என அவர்களை வாழ்த்தி பேச சொல்லி ஸ்ருதி சொல்கிறாள். முதல் மனோஜ் தான் பேசுகிறான். "என்னால தான் இவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தது. இல்லைனா இவனுக்கு எல்லாம் யார் பொண்ணு கொடுத்து இருப்பா. எனக்கு தான் நீங்க இரண்டு பெரும் நன்றி சொல்லணும்" என்கிறான். அடுத்ததாக பேசிய ரோகிணி "ஒரு கணவனை மாற்ற வேண்டிய கடமை மனைவிகிட்ட தான் இருக்கு. முத்து மரியாதையா பேசினதே கிடையாது. அதை மீனா கண்டிப்பதும் இல்ல. அடுத்த வருஷமாவது அவர் திருந்தி இருப்பாரான்னு பார்க்கலாம்" என்கிறாள்.

மீனா முத்து பற்றி ரவி பேசுகையில் " இத்தனை வருஷம் நான் பார்த்த முத்துவுக்கும் இப்போ நான் பாக்குற முத்துவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இது எல்லாத்துக்குமே அண்ணிதான் காரணம். அவங்க இரண்டு பேரும் சரியான ஜோடி" என்கிறான். ஸ்ருதி பேசுகையில் "எனக்கும் ரவிக்கும் கல்யாணம் நடந்ததுக்கு முக்கியமான காரணம் மீனா தான். முத்து மாதிரி கோபப்படறவரோட வாழறது ரொம்ப கஷ்டம். ஆனா மீனா அவரை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்குறாங்க. அவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்" என சொல்லி மீனாவை போய் கட்டிப்பிடித்து கொள்கிறாள் ஸ்ருதி.

Siragadikka Aasai : முத்துவை வாழ்த்தி பேசும் தருணம்... யார், என்ன சொன்னாங்க தெரியுமா? சிறகடிக்க ஆசை அப்டேட்
அடுத்ததாக பேசிய விஜயா "ஜாதிக்கு ஏத்த மூடி. முதல நான் இவளை என்னாவொன்னு நினைச்சேன் ஆனா மீனா சரியான ஆளு தான். எவ்வளவு பிரச்சினை வந்தாலும் அதை எல்லாம் தாண்டி மேல போயிட்டே இருக்கா. ஒரு நாள் ஸ்கூல் பசங்க போல அடிச்சுப்பாங்க உடனே காந்தம் போல ஒட்டிக்குவாங்க" என தன்னையே அறியாமல் மீனாவை பற்றி பெருமையாக பேசுகிறாள் விஜயா.

அண்ணாமலை பேசுகையில் "பிடிக்காத இரண்டு பேருக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்துது. ஆனா நான் செய்த நல்ல விஷயமா இவங்க கல்யாணத்தை பார்க்குறேன். பொருத்தமான ஜோடி. கணவன் மனைவி இவர்களை போல தான் வாழ வேண்டும்" என்கிறார். முத்துவும் மீனாவும் இன்று போல் என்றும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என பாட்டி வாழ்த்துகிறார்.

அடுத்ததாக மீனா பற்றி முத்து பேசுகையில் "முதலில் எங்க இரண்டு பேருக்கும் செட் ஆகவே இல்லை. என்னை முரடன் குடிகாரன் இப்படி தான் சொல்லுவாங்க. ஆனா மீனா தான் என்னை வித்தியாசமா பார்த்தா. அவளுக்காக என்னை மாறவைச்சா. அவளுடன் வாழ்வது புது அனுபவமாக இருக்கிறது. நல்ல விஷயம் சொன்ன கேட்டுக்குவேன்" என்கிறான்.

மீனா முத்து பற்றி பேசுகையில் "கோபத்தில் பேசுவாரே தவிர மனசில் எதுவுமே வைச்சுக்கமாட்டார்.  பாசம் வைச்சவங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். நான் நினைச்சதை விட ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு அவர் தான் ஒரு அடையாளம் கொடுத்தார்.

இந்த கோபம் சில பழக்கம் எல்லாம் பாதியில வந்தது. அதுக்கு பின்னாடி ஏதோ ஒரு காரணம் இருக்கு. அதனால தான் அவர் வாழ்க்கை மாறி இருக்கு. அது என்னனு இதுவரைக்கும் அவர் என்கிட்ட சொல்லல. அதை என்னைக்கு எனக்கு சொல்றாரோ அன்னிக்கு தான் அவர் என்னை முழுசா பொண்டாட்டியா ஏத்துக்கிட்டார் என அர்த்தம்" என மீனா சொல்ல முத்து, மனோஜ் மற்றும் விஜயா முகமே மாறி விடுகிறது.

மீனாவோட அம்மா மீனா முத்து பற்றி பேச வர அந்த நேரத்தில் சத்யா வருகிறான். அவனை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இதுதான் இன்றைய எபிசோடுக்கான கதைக்களம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget