Varisu update : இருபது வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணையும் இரண்டு நடிகைகள்... வைரலாகும் 'வாரிசு' போட்டோஸ்
'வாரிசு' படம் குறித்த அப்டேட்கள் சரவெடிபோல அவ்வப்போது வெளியாகும்
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் மிகவும் மாஸான ஹீரோ இளைய தளபதி விஜயின் "வாரிசு" திரைப்படத்திற்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் ரசிகர்களை குளிரவைக்கும் விதமாக பல புதிய அப்டேட்களை வழங்கி வருகிறார்கள் வாரிசு படக்குழுவினர்.
பொங்கல் ரிலீஸாக வெளியாகும் இப்படத்தின் போஸ்டர்கள் அவ்வப்போது வெளியாகிய நிலையில் தற்போது புதிதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சரவெடி போல அப்டேட் :
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் உருவாகிவரும் ‘வாரிசு' படத்தில் விஜய் ஜோடியாக ரஷ்மிகா மந்தனா மற்றும் ஜெயசுதா, பிரபு, சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, சம்யுக்தா, பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இயக்குநர் வம்சி இந்த வாரம் முதல் 'வாரிசு' படம் குறித்த அப்டேட்கள் சரவெடி போல அவ்வபோது வெளியாகும் எனும் அறிவிப்பு ஒன்றை தீபாவளியை முன்னிட்டு வெளியிட்டு இருந்தார். அந்த அறிவிப்பை உண்மையாகும் வகையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சிறப்பான சில ஸ்டில்கள் பகிரப்பட்டன.
View this post on Instagram
கிரிஷ் வெளியிட்ட போட்டோ :
அதன் தொடர்ச்சியாக பாடகர் கிரிஷ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு அழகான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் இயக்குநர் வம்சி, ஷாம், சினேகா, மீனா, மகேஸ்வரி மற்றும் அவரது மனைவி சங்கீதா உடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம். இந்த போட்டோ தற்போது வைரலாக பரவி சில யூகங்களை எழுப்பி வருகிறது. வாரிசு திரைப்படத்தில் நடிகை மீனா மற்றும் சினேகா நடித்துள்ளனரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைகின்றனரா ?
"வசீகரா" திரைப்படம் மூலம் நடிகர் விஜய் ஜோடியாக சினேகா நடித்திருந்தார். மீனாவுடன் இணைந்து நடிகர் விஜய் "ஷாஜஹான்" எனும் படத்தில் "சரக்கு வைச்சிருக்கேன்..." எனும் ஒரு துள்ளலான பாடலுக்கு நடனமாடியுள்ளார். வாரிசு படத்தில் நடிக்கும் ஷாம் மற்றும் சங்கீதா இருவருடனும் மீனா மற்றும் சினேகா இருப்பதால் அவர்களும் இப்படத்தின் ஒரு அங்கமாக இருக்கக்கூடும் என்பது ரசிகர்களின் யூகம். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. இந்த அழகான ஜோடி படத்தில் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. வாரிசு படத்தின் சிங்கிள் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாந்துபோன ரசிகர்களுக்கு இந்த புகைப்படங்களும் தகவலும் ஒரு எனர்ஜி ட்ரிங்போல உள்ளது.