Arasan Promo : சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்..திரையரங்கில் வெளியான அரசன் ப்ரோமோ..இதுலகூட டப்பிங் பிழையா!
Arasan Movie Promo : வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அரசன் படத்தின் ப்ரோமோ இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது

வடசென்னையை கதையுலகில் பகுதியாக வெற்றிமாறன் சிம்புவை வைத்து இயக்கி வரும் திரைப்படம் அரசன். முன்னதாக வடசென்னை படத்தில் சிம்பு நடிக்க இருந்து பின் தனுஷ் இப்படத்தில் நடித்தார். ரசிகர்களின் பல வருட காத்திருப்புக்குப் பின் தற்போது வெற்றிமாறன் சிம்பு கூட்டணியில் அரசன் படம் உருவாக .இருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோ இன்று சென்னையில் உள்ள குறிப்பிட்ட சில திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
அரசன் பட ப்ரோமோ
கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் உருவாக இருக்கும் அரசன் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வெற்றிமாறன் மற்றும் அனிருத் கூட்டணி இணைவது இதுவே முதல் முறை. இந்த ப்ரோமோ வீடியோவில் இயக்குநர் நெல்சனும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். ஒரே இரவில் மூன்று கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட விசாரணை கைதியாக வருகிறார் சிம்பு. அரசியல் , காமெடி, ரத்தம் தெறிக்கும் வன்முறை என தனது தனித்துவமான நடையில் இந்த ப்ரோமோவை எடுத்துள்ளார் வெற்றிமாறன். வெற்றிமாறனின் படங்களைப் போல் இந்த ப்ரோமோவிலேயே சில டப்பிங் சிக்கல்கள் இருக்கின்றன . இடையில் தனுஷின் ரெஃபரன்ஸூம் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடம் கைதட்டல்களை பெறுகிறது. வடசென்னைக்கு சந்தோஷ் நாராயணன் மிக சிறப்பாக இசையமைத்திருந்தார். இந்த ஒட்டுமொத்த ப்ரோமோவில் அனிருத்தின் பின்னணி இசை கொஞ்சம் சுமாராக தெரிந்தாலும் ப்ரோமோவை வைத்து முழுவதுமாக மதிப்பிடுவது கடினம். மற்றபடி சிம்பு ரசிகர்களுக்கும் சரி வெற்றிமாறன் ரசிகர்களையும் திருபதி படுத்தும் விதமாக இந்த ப்ரோமோ அமைந்துள்ளது. திரையரங்கில் ஒவ்வொரு காட்சிகளுக்கும் விசில் பறக்கின்றன. நாளை யூடியுப் தளத்தில் இந்த ப்ரோமோ வெளியாக இருக்கிறது.
A thread - My experience - My 1st ever movie, I watched alone (without family) - The movie name is #Padayappa he Date: April 10, 1999. As a just born teenager, I wanted to feel what #Thalaivar movie celebration was.
— 𝔻𝕣. 𝔹𝕠𝕙𝕣𝕒 𝕄𝔻. 𝔸𝕀ℝ𝔻 (@Vasheegaran) December 12, 2019
Location - Albert theatre.#HBDThalaivarSuperStarRajini




















