மேலும் அறிய

Watch Video Shruti Haasan: “சங்கடமாக இருந்தது; பாடிகார்டுகள் வைத்துக்கொள்ள விரும்பவில்லை” - மனம் திறந்து பேசிய ஸ்ருதி

”எனக்கு பாடிகார்டுகளை வைத்து கொள்ள நான் விரும்பியதில்லை. அது எனக்கு பிடிக்காது. என்னுடைய வாழ்க்கையை எனது பாதுக்காப்புக்கு ஏற்றார் போல் வாழ விரும்புகிறேன்”

Watch Video Shruti Haasan: விமான நிலையத்தில் விடாமல் துரத்தி துரத்தி வந்து தன்னை பின் தொடர்ந்த நபர் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் பேசியுள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் நடிப்பு மட்டும் இல்லாமல், இசையமைப்பாளர், பாடகி என பன்முகம் கொண்டவராக வலம் வருகிரார். சூர்யா நடிப்பில் வெளிவந்த 7ம் அறிவு படத்தின் மூலம் தமிழி சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ருதி ஹாசன், தனுஷுடன் 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம்3 படங்களில் நடித்து பிரபலமானார். தெலுங்கு சினிமாவிலும் நடித்து தனது கெரியரை உயர்த்தியுள்ள ஸ்ருதி ஹாசன், இசை மற்றும் பாடலால் இந்திய அளவில் பிரபலமடைந்துள்ளார். 

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஸ்ருதி ஹாசனின் விமான நிலையத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. மும்பை விமான நிலையத்தில் வரும் ஸ்ருதிஹாசனை பார்த்த பொதுமக்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் அவரை வீடியோ எடுக்க முயன்றனர். அப்பொழுது கருப்பு சட்டையும், நீல நிற ஜீன்ஸ் போட்டு இருந்த நபர் ஒருவர் ஸ்ருதி ஹாசனை விடாமல் ஃபாலோ செய்து வீடியோ எடுக்க முயன்றார். அவரின் செயலால் சங்கடமடைந்த ஸ்ருதி ஹாசன், நீங்கள் யார் என தெரியவில்லை என கூறும் வீடியோ வெளியானது. 

View this post on Instagram
 
A post shared by Instant Bollywood (@instantbollywood)

இது குறித்து சமூக வலைதளத்தில் தனது ஃபாலோவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார். அதில், “ என்னை ஃபாலோ செய்தவர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. நான் நடந்து வெளியே வந்து கொண்டிருக்கும்போது அந்த நபர் விடாமல் என்னை பின் தொடர்ந்தார். அங்கிருந்த புகைப்பட கலைஞர்கள், என்னை பின் தொடர்ந்து எனக்கு அருகில் அந்த நபரை செல்லும்படி கூச்சலிட்டனர். அந்த நபர் புகைப்பட கலைஞர்களின் நண்பர் என நினைக்கிறேன். அவர் அப்படி செய்ததால், நான் சங்கடமாக உணர்ந்தேன். எனக்கு அந்த நபரை தெரியவில்லை. அவர் என்னிடம் வந்து பேச முயன்றார்.  அவரால் மிகவும் அசவுகரியமாக உணர்ந்தேன். எனக்கு பாடிகார்டுகளை வைத்து கொள்ள நான் விரும்பியதில்லை. அது எனக்கு பிடிக்காது. என்னுடைய வாழ்க்கையை எனது பாதுகாப்புக்கு ஏற்றார் போல் வாழ விரும்புகிறேன். ஆனால், இதுபோன்ற சங்கடமாகும் நிகழ்வுகள் வருத்தமளிக்கிறது. எனது தனிப்பட்ட வாழக்கைக்கான இடம் என்பது எப்பொழுதுமே முக்கியமானது” என பேசியுள்ளார். 

மேலும் படிக்க: October Cinema updates : அக்டோபர் மாசம் பட்டாசா இருக்க போது...கியூ கட்டி நிக்கும் கோலிவுட் அப்டேட்ஸ்!

Trisha: இதோட நிறுத்திக்கோங்க... சியர்ஸ்.. திருமண வதந்திகளுக்கு லியோ பட பாணியில் ஃபுல்ஸ்டாப் வைத்த த்ரிஷா!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget