மியூசிக் ஆல்பத்தில் ஒன்றாக கலக்க தயாராகும் கமல் - ஸ்ருதிஹாசன்: ரசிகரகள் ஹேப்பி
ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து ஒரு புதிய இசை படைப்பினை உருவாக்க இருப்பதாக தகவல்
புதிய மியூசிக்கல் ஆல்பத்தில் கமல்ஹாசனும், ஸ்ருதி ஹாசனும் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தியன் 2, மீண்டும் மணிரத்னம் இயக்க உள்ள கமல்ஹாசன் 234 படங்களில் ஒப்பந்தமாகியுள்ள கமல் பிசியாக நடித்து வருகிறார். இதேபோன்று பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளார். ஸ்ருதிஹாசன் நடிப்பு மட்டும் இல்லாமல் இசை, பாடகி என பன்முக தன்மை கொண்டவராக வலம் வருகிறார். கமல்ஹாசனும் நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர், பாடல் என பன்முக தன்மை கொண்டவராக வலம் வருகிறார். இந்த நிலையில் தந்தையும், மகளும் ஒன்றாக இணைந்து எப்பொழுது இசை ஆல்பம் வெளியிடுவார்கள் என கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.
அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன், ”ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து ஒரு புதிய இசை படைப்பினை உருவாக்க இருப்பதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து இசை ஆல்பம் எப்பொழுது வெளியாகும் என்ற கூடுதல் விவரங்களை ரசிகர்கள் கேட்டு வந்தனர். இதற்கிடையே ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கிய 'என்னிடம் கேள்வி கேளுங்கள்' என்ற நிகழ்வில், கமல்ஹாசனுடன் இணைந்து நடத்த உள்ள இசை ஆல்பம் குறித்த அப்டேட்டை ரசிகர்கர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், '' அது ஒரு மியூசிக்கல் ப்ராஜெக்ட். அது என்ன என்பதை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறோம். இது தொடர்பாக நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன் '' என்றார்.
முன்னதாக துபாயில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த பாடகருக்கான விருதை கமல்ஹாசனுக்கு, நடிகை ஸ்ருதிஹாசன் வழங்கினார். அப்போது தான் மகளுடனான தனது இசை ஆல்பத்தை கமல் வெளியிட்டிருந்தார். இதற்கு முன்னதாக ஸ்ருதிஹாசன் ' எட்ஜ்' , ' ஷீ இஸ் எ ஹீரோ' என்ற இரண்டு இசை ஆல்பத்தை வெளியிட்டர். அது இரண்டும் பார்வையாளர்களிடம் பெரிய அளவில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. அதை தொடர்ந்து தனது மூன்றாவது இசை ஆல்பத்தை கமல்ஹாசனுடன் இணைந்து வெளியிட தயாராகி வருகிறார் ஸ்ருதிஹாசன்.
மேலும் படிக்க: Dhruv Vikram: கனவுகள் நிஜமாகும் காலம்.. துருவ் விக்ரமை இயக்கும் மாரி செல்வராஜ்.. அப்டேட் தந்த பா.ரஞ்சித்!
ரூ.35,000 முதல் ரூ.2.50 லட்சம் வரை... பறவைகளை வளர்க்கும் நடிகர்கள் - க்யூட் வீடியோக்கள்