மேலும் அறிய

Dhruv Vikram: கனவுகள் நிஜமாகும் காலம்.. துருவ் விக்ரமை இயக்கும் மாரி செல்வராஜ்.. அப்டேட் தந்த பா.ரஞ்சித்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.

துருவ் விக்ரம்

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா  நடித்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்யா வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  நடிகராக அறிமுகமானார் துருவ்.

இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான மகான் திரைப்படத்தில் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து நடித்து அசத்தினார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் குறிப்பிடத்தகுந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் துருவ் விக்ரம்.

மாரி செல்வராஜ் கூட்டணி

இதனிடையே, இயக்குநர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்திற்கு அடுத்ததாக துருவ் விக்ரமுடன் இணைய இருந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் பா ரஞ்சித்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தப் படம் தாமதமாகியது என்று முன்னதாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இந்தப் படம் தாமதாகியதற்கு காரணம், உதயநிதி ஸ்டாலின் தனது கடைசி படத்தை மாரி செல்வராஜ் இயக்க வேண்டும் என்று விடாப்பிடியாக கேட்டுக்கொண்டதனால் தான் என்று, மாமன்னன் படத்திற்கு பின் தெரிய வந்தது. மாமன்னன் படத்தை தொடர்ந்து வாழை என்கிற படத்தையும் எடுத்து முடித்துள்ளார் மாரி. இதனைத் தொடர்ந்து தற்போது துருவ் விக்ரமுடன் இணைந்து அடுத்தப் படத்தில் பணியாற்றி வருகிறார் மாரி செல்வராஜ்.

துருவ் விக்ரமுனுடனான இந்தப் படம் கபடியை மையப்படுத்தியதாக இருக்கும் என்று முன்பே கூறப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக 1990 காலக்கட்டத்தில் தூத்துக்குடியை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயரித்து வருகிறது.

 

வாழ்த்திய ரஞ்சித்

இந்நிலையில் இன்று  நடிகர் துருவ் விக்ரம் தன் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். தனது ட்விட்டர் பக்கத்தில் “பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களது கனவுகள் நிஜமாக வாழ்த்துக்கள். உங்களுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார் ரஞ்சித்.

இதனுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவரின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் கபடி டீ ஷர்ட் அணிந்துள்ளார்கள். இந்த போஸ்டர் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Embed widget