Shruthi Narayanan: கெட்டதை விட்ருங்க.. புதிய போட்டோவை ரிலீஸ் செய்த ஸ்ருதி நாராயணன்!
சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் ஸ்ருதி நாராயணன் தனது புகைப்படத்தை பதிவிட்டு, கெட்டதில் இருந்து வெளியே வந்து நல்லதை மட்டும் தக்க வைத்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி நாராயணன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது ஆடிஷன் வீடியோ என்ற ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியது. படம் ஒன்றிற்காக என்று தகவல்கள் வெளியாகிய நிலையில், ஸ்ருதி நாராயணன் நடிப்பில் கட்ஸ் என்ற படம் கடந்த மாதம் வெளியானது.
போட்டோ ரிலீஸ் செய்த ஸ்ருதி நாராயணன்:
அந்த ஆபாச வீடியோவிற்கு பிறகு ஸ்ருதி நாராயணன் கட்ஸ் படத்தின் நிகழ்ச்சி மட்டும் பங்கேற்று வந்த நிலையில், ஸ்ருதி நாராயணன் பெரியளவில் பேசாமலே இருந்தார். இந்த நிலையில், ஸ்ருதி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கெட்டதை விடுங்கள்:
அதில், அனைத்து கெட்டதில் இருந்தும் வெளியேறிவிட்டு நல்லதை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார். தனது முழு உருவ சிவபபு நிற புகைப்படத்தையும், லிப்ஸ்டிக் பூசிய தனது உதட்டு புகைப்படத்தையும் இந்த வாசகத்துடன் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோ ரிலீசான பிறகு கடும் விமர்சனத்தையும் சிக்கலையும் ஸ்ருதி நாராயணன் எதிர்கொண்டார். அதன்பின்பு, பின்னர் மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். இந்த நிலையில், இன்று மீண்டும் தனது புகைப்படத்தை பதிவிட்டு கெட்டதை விடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
குவியும் பட வாய்ப்புகள்:

தற்போது ஸ்ருதி நாராயணனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளும், சீரியல் வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இந்த விவகாரத்தில் அவர் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டாலும், அவரது ரசிகர்கள் இதில் இருந்து ஸ்ருதி நாராயணன் மீண்டு வர வேண்டும் என்றும், அவர் தனது நடிப்பு திறமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஸ்ருதி நாராயணன் நடித்த கட்ஸ் படத்தின் இயக்குனர் அந்த பெண்ணை வாழவிடுங்கள். தவறு செய்யாத மனிதனே இல்லை என்று உணர்வுப்பூர்மாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram






















