நீ கர்ப்பமாக உதவுகிறேன்...ப்ரீத்தி ஜிந்தாவிடம் வரம்பு மீறி பேசிய ஷாருக் கான் வீடியோ வைரல்
நடிகர் ஷாருக் கான் மற்றும் ப்ரீத்தி ஜிந்தாவின் பழைய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷாருக் கான் சில நேரங்களில் எல்லை மீறி பேசிவிடுவதாக ரசிகர்கள் சுட்டிகாட்டி வருகிறார்கள்

சில நேரங்களில் மேடை நிகழ்ச்சிகளில் பிரபலங்கள் எல்லைமீறி விடுவதுண்டு. அண்மையில் ரன்வீர் சிங் காந்தாரா படத்தின் காட்சியை நடித்து காட்டியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனை தொடர்ந்து ரன்வீ சிங் பகிரங்க மன்னிப்பு கேட்டார். அந்த வகையில் ஷாருக் கான் எப்போதும் பேட்டிகளிலும் சினிமா நிகழ்ச்சிகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுபவராக இருந்திருக்கிறார். ஷாருக் கான் ரசிகர்கள் இதில் உள்ள நகைச்சுவைத் தன்மையை ரசித்தாலும் எல்லா ரசிகர்களாலும் இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடிந்ததில்லை. ப்ரீத்தி ஜிந்தாவுடன் ஷாருக் பேட்டி ஒன்றில் பேசிய விதம் தற்போது பேசுபொருளாகியுள்ளது
உன்னை கர்ப்பமாக்க தயார்
2004 ஆம் ஆண்டு காபி வித் கரன் நிகழ்ச்சியில் ப்ரீத்தி ஜிந்தா மற்றும் ஷாருக் கான் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ப்ரீத்தி ஜிந்தாவிடம் ஷாருக் கான் " நீ நடிக்கும் படத்தில் நீ கர்ப்பமாக இருக்கிற மாதிரி கேரக்டர் இருந்தால் கவலைப்படாதே நானே உன்னை கர்ப்பமாக்குகிறேன் " என கூறியுள்ளார் " இந்த நகைச்சுவையை கேட்ட ப்ரித்தி ஜிந்தா முதலில் அதிர்ர்சி அடைந்து பின் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டார். இதேபோல் ரியாலிட்டி ஷோ ஒன்றில் ஒரு இளம் பெண் ஷாருக் கானிடம் 'நீங்கள் தூங்கும் போது குறட்டை விடுவீர்களா என கேட்ட கேள்விக்கு " நீ வயதில் கொஞ்சம் பெரியவளாக இருந்திருந்தால் நான் வேற மாதிரி பதில் சொல்லியிருப்பேன் ' என கூறியிருப்பார். அதே கேள்வியை ஒரு ஆண் கேட்டபோது 'வந்து கூட படுத்து பாரு ' என்று அவர் பதிலளித்திருப்பார்.
இந்த மாதிரி பல்வேறு நிகழ்ச்சிகளில் ஷாருக் கான் ஒளிவுமுறைவில்லாமல் பேசுவார். இதனை அவரது ரசிகர்கள் அவரை நன்றாக தெரிந்தவர்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் எதிரில் இருப்பவர்களை அசெளகரியப்படுத்தும் விதமாக தனது சுய பெருமையை பேசும் விதமாகவும் இந்த கருத்துகள் இப்பதாக விமர்சனம் வைத்துள்ளார்கள்.
I CAN MAKE YOU PREGNANT 😲😯
— CineAlpha (@CineAlpha1) December 3, 2025
I don’t hate SRK, but I really don’t understand why he says things like this. Once in a while is fine, but when someone like him does it repeatedly, it’s not okay.
He’s educated, but sometimes it feels like education doesn’t matter if you don’t know… https://t.co/edT7yKP7kM pic.twitter.com/XXujrNYoyk





















