Selvaragavan : வெறுப்பை பற்றி கிளாஸ் எடுத்த செல்வராகவன்... ரொம்ப உணர்ச்சிவசப்படுறாரே என ரசிகர்கள் ஆதங்கம்!
செல்வராகவன் அடுத்ததாக 'வெறுப்பு' குறித்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் என பல அற்புதமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் அவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'நானே வருவேன்'.
நடிப்பில் இறங்கிய இயக்குநர் :
இயக்குனராக மிகவும் பரிச்சயமான செல்வராகவன் சமீப காலமாக நடிப்பிலும் இறங்கியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மட்டுமின்றி நானே வருவேன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். சில தினங்களுக்கு முன்னர் வெளியான பகாசூரன் திரைப்படத்தில் கதாநாயகனாக செல்வராகவன் நடித்திருந்தார். நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் செல்வாராகவன் நடிக்கும் போஸ்டர் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. இருப்பினும் செல்வராகவனை நடிகராக பார்ப்பதை காட்டிலும் ஒரு இயக்குனராக பார்க்கவே அவரின் ரசிகர்கள் மிகவும் ஆசை படுகிறார்கள்.
செல்வராகவனின் லேட்டஸ்ட் போஸ்ட் :
சமீப காலமாக செல்வராகவன் சோசியல் மீடியாவில் மிகவும் உருக்கமான போஸ்ட்களை பகிர்ந்து வருகிறார். பணம், தனிமை, நண்பர்கள் என தனது மனதிற்கு வருவதை பதிவிட்டு வருகிறார். அவை பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் தற்போது செல்வராகவன் போஸ்ட் செய்து இருப்பது வெறுப்பு குறித்த பதிவு.
"வெறுப்பு என்பது மிக மோசமான உணர்வு ! அது உங்களைத்தான் அதிகம் காயப்படுத்தும். மனதிற்கும் சேதம் விளைவிக்கும். வாழ்க்கையில் பார்க்க எவ்வளவோ இருக்கின்றது. வெறுப்பை தூக்கி கடாசிவிட்டு முன்னோக்கி போய் விடுங்கள் !" என பதிவிட்டுள்ளார். பலரும் அவரின் இந்த போஸ்டுக்கு லைக்ஸ்களை குவித்து ஷேர் செய்தும் வருகிறார்கள்.
என்னதான் ஆச்சு செல்வராகவனுக்கு? ஏன் அவர் சமீப காலமாக மிகவும் மனம் வெறுத்தது போல போஸ்ட்களை பதிவிட்டு வருகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.