Actress Elli Avrram: ஒரு நைட்டுக்கு ரூ.40 லட்சம்.. தனுஷ் பட நடிகையை பற்றி வைரலாகும் சர்ச்சை ட்வீட்...!
தனுஷின் நானே வருவேன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை எல்லி அவ்ரம் குறித்து வெளிநாட்டு விமர்சகர் என கூறப்படும் உமைர் சந்து வெளியிட்டுள்ள தகவல் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தனுஷின் நானே வருவேன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை எல்லி அவ்ரம் குறித்து வெளிநாட்டு விமர்சகர் என கூறப்படும் உமைர் சந்து வெளியிட்டுள்ள தகவல் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பொதுவாக தமிழ் சினிமாவில் நடிக்கும் பெண் நடிகைகள் குறித்து பல விதமான வதந்திகள் வெளிவருவது வழக்கம். ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த மாதிரி தங்களது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்க அவற்றை விமர்சிக்கும் ரசிகர்களும் அதற்கு பதிலடி கொடுக்கும் பிரபலங்களும் என்பது தினசரி நிகழ்வாக சென்று கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் தனுஷ் பட நடிகை குறித்து வெளிநாட்டு விமர்சகர் என தன்னை கூறிக் கொள்ளும் உமைர் சந்து வெளியிட்டுள்ள ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நானே வருவேன் படம்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான படம் நானே வருவேன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்ற நானே வருவேன் படத்தில் வில்லன் தனுஷூக்கு ஜோடியாக நடிகை எல்லி அவ்ரம் நடித்திருந்தார். இப்படத்தில் அவர் மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பார்.
எல்லி தமிழ் மட்டுமல்லாது இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இப்படியான நிலையில் தமிழில் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நடிகை காஜல் அகர்வால் நடித்த ‘பாரீஸ் பாரீஸ்’ படத்தில் தான் முதலில் எல்லி அவ்ரம் நடித்தார். ஆனால் நானே வருவேன் படம் அவருக்கு முதல் படமாக தமிழில் அமைந்தது.
சர்ச்சையை கிளப்பிய ட்வீட்
இதனிடையே இந்திய சினிமாவில் ரிலீஸ் ஆகும் புதிய படங்கள் குறித்த விமர்சனங்களை முதல் ஆளாக வெளியிட்டு தன்னை சினிமா விமர்சகரும், வெளிநாட்டு தணிக்கை துறையில் பணிபுரிபவருமாக சொல்லிக் கொள்ளும் உமைர் சந்து, சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் குறித்து பல மோசமான தகவல்களை பதிவிட்டு வருகிறார்.
இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நடிகை எல்லி அவ்ரம் குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, “இவரின் பாலிவுட் கேரியர் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், தற்போது நைட் பிஸினஸ் செய்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு இரவுக்கு ரூபாய் 40 லட்சம் கேட்பதாகவும், டெல்லியில் உள்ள அரசியல் பிரமுகர்களுடன் இரவுகளை கழித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் உமைர் சந்துக்கு எதிராக கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.